செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவின் யூ டியூப் சேனலான சாணக்யா, யூ டியூப் நிறுவனத்தால் மீண்டும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
செய்தியாளர் ரங்கராஜ் பாண்டே நடத்தி வரும் யூ டியூப் சேனல் சாணக்யா டிவி. கடந்த இரண்டு நாட்களுக்கு முன் சாணக்யா டிவியின் யூ டியூப் பக்கம் செயல் இழந்தது. சேனலின் முகப்பு பகுதியில், சாணக்யா டிவி சேனல், யூ டியூப் நிறுவனத்தால் முடக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது இணையத்தில் சர்ச்சையானது.
இது குறித்து சேனல் நிறுவனர் ரங்கராஜ் பாண்டே செய்திருந்த ட்வீட்டில், உங்கள் எல்லோரின் ஆதரவோடு நாங்கள் தீவிரமாக வளர்ந்து வருகிறோம். சாணக்யா யூ டியூப் சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளதே எங்களின் வளர்ச்சிக்கு சிறந்த உதாரணம். யூடியூப்பில் புகார் செய்துள்ளோம். http://chanakyaa.in, Facebook & twitter போன்ற அனைத்து தளங்களும் சீராக உள்ளன. இறைவனின் கிருபையால் எங்கள் சேவைகளை தொடர்ந்து செய்வோம், என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சாணக்யா சேனல் ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டரில் பதிவிட்ட ரங்கராஜ் பாண்டேவுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உங்கள் சேனலை யாரும் ஹேக் செய்யவில்லை. அது முடக்கப்பட்டு இருக்கிறது. அதை யூ டியூப் நிறுவனமே தெளிவாக உங்கள் பக்கத்தில் சொல்லி இருக்கிறது. யூ டியூப் விதிமுறைகளை மீறி உள்ளீர்கள். அதனால் உங்கள் சேனல் யூ டியூப் மூலம் முடக்கப்பட்டுள்ளது. யூ டியூப் நிறுவனத்தின் விதிகளை பின்பற்றி விளக்கம் கொடுத்தால் உங்கள் சேனலின் முடக்கம் நீக்கப்படும். சர்ச்சைக்குரிய வீடியோக்களை நீங்கள் நீக்க வேண்டும். உங்கள் சேனலை யாரும் ஹேக் செய்யவில்லை என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
பின்னர் சேனல் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. ஆனால் தற்போது மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. யூ டியூப் விதிமுறைகளை மீறியதால் மீண்டும் சேனல் முடக்கப்பட்டுள்ளது. நீங்கள் யூ டியூப் கம்யூனிட்டி விதிகளை மீறிவிட்டீர்கள். அதனால் உங்கள் சேனல் முடக்கப்படுகிறது என்று யூ டியூப் இந்தியா சாணக்கியா சேனலின் முகப்பு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், 48 மணி நேரத்துக்கு முன்னாடி இருந்த அதே நிலை. சாணக்யா பக்கத்தை மீண்டும் Hackகி இருக்கிறார்கள். முறையீடு செய்திருக்கிறோம். இறைவன் கருணை, உங்கள் அன்பால் மீண்டு(ம்) வருவோம். மற்றவை வழக்கம் போல், என்று ரங்கராஜ் பாண்டே இது குறிப்பிட்டுள்ளார். சாணக்யா சேனல் யூ டியூப் மூலம் முடக்கப்பட்ட நிலையில் இதை ஹேக்கிங் என்று ரங்கராஜ் பாண்டே மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.