scorecardresearch

ரங்கராஜ் பாண்டே தந்தை மரணம்: ஸ்டாலின், ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா (எ) ராம்சிங்ஹாசன் பாண்டே உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்குச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

Rangaraj Pandey's father dies, Rangaraj panday, ரங்கராஜ் பாண்டே தந்தை மரணம், ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி, ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி, MK Stalin, Rajinikanth, Tamil news, latest tamil news

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா (எ) ராம்சிங்ஹாசன் பாண்டே நேற்றைய தினம் உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 87.

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா (எ) ராம்சிங்ஹாசன் பாண்டே உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானார். சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அவருடைய இல்லத்திற்குச் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே. இவர் சாணக்யா என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். அதன் வழியாக தனது அரசியல் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில், ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாசார்யா (எ) ராம்சிங்ஹாசன் பாண்டே உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானார். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

ராங்கராஜ் பாண்டேவின் தந்தை ரகுநாதாச்சார்யா மரணம் அடைந்ததை அறிந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ரங்கராஜ் பாண்டே இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், தந்தையை இழந்து வாடும் ரங்கராஜ் பாண்டேவையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “தனது தந்தையார் ரகுநாதாச்சார்யா என்கிற ராம்சிங்ஹாசன் பாண்டே அவர்களை இழந்து வாடும் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே அவர்களையும் அவரது குடும்பத்தாரையும் சந்தித்து எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே போல, நடிகர் ரஜினிகாந்த் ரங்கராஜ் பாண்டே வீட்டுக்கு நேரில் சென்று ரங்கராஜ் பாண்டே தந்தையின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Rangraj pandeys father passed away mk stalin rajinikanth pays tribute