Covid 19: ராணிப்பேட்டை மாவட்டம், நாவல்பூரில், கொரோனா தொற்றுக்கு பலியான 34 வயது செவிலியரை அடக்கம் செய்ய, கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. பின்னர் ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டின் மூலம் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.
Tamil News Today Live : காய்ச்சல் முகாம்கள் மூலம் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் கண்டுபிடிப்பு
பி. ரூபன் ராஜ்குமாரின் மனைவியும், ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்தவருமான என்.அர்ச்சனா ஆகஸ்ட் 2-ஆம் தேதி, கோவிட் -19 காரணமாக இறந்தார். இந்தத் தம்பதியருக்கு 3-ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார்.
“அடக்கம் நாவல்பூரில் உள்ள ஒரு கல்லறையில் நடத்தப்பட இருந்தது. மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அந்த இடத்தை ஆய்வு செய்து, அதற்காக 12 அடி ஆழம் இருக்க வேண்டும் என்று கூறினார். எல்லாம் விதிமுறைகளின்படி செய்யப்பட்டது. இருப்பினும், நாங்கள் அங்கு சென்றபோது, ராணிப்பேட்டையின் முன்னாள் தலைவரும், இன்னும் சிலரும், மனிதனேய மக்கள் கட்சியினரும், அதிகாரிகளையும், தன்னார்வலர்களையும் வேலை செய்யத் தடுத்தனர்” என இறந்தவரின் மாமனார் வினோபா ஜெயக்குமார் கூறினார்.
சில போலீஸ் அதிகாரிகளும் முன்னாள் தலைவருக்கு சார்பாக பேசியது, தனக்கு வருத்தமளித்ததாகவும் அவர் கூறினார். “இறுதியாக, உள்ளூர் நிர்வாகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் அந்த இடத்தை அடைந்தனர். அவர்களின் தலையீட்டைத் தொடர்ந்து மாலையில் அடக்கம் நடைபெற்றது” என்றார் திரு. ஜெயக்குமார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் எஸ். திவ்யதர்ஷினி கூறுகையில், அங்கு அடக்கம் நடைபெறுவதை ஒரு சிலர் விரும்பவில்லை. "பிரச்னையை உருவாக்கிய நபர்கள் மீது நாங்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்றுவரை, மாவட்டத்தில் 40 COVID-19 தொடர்பான மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அவை அடக்கம் செய்யப்படும் போது எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.
கொஞ்ச நேரத்தில் சத்தான உணவு… ருசியான கொண்டைக் கடலை சாலட்
திருமதி அர்ச்சனா கடந்த நான்கு ஆண்டுகளாக ஆற்காடு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். COVID-19 நோயாளிகளின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்காக, மருத்துவர்களுடன் அவர் சென்று வந்திருந்தார். அர்ச்சனாவுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. சனிக்கிழமை காலை, அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகக் கூறினார். நாங்கள் அவரை கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு அழைத்துச் சென்றோம். பின்னர் அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலமானார். அவரது மரணத்திற்குப் பிறகு தான் அவருக்கு கோவிட் -19 இருந்தது எங்களுக்குத் தெரிய வந்தது” என்றார் திரு. ஜெயக்குமார்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.