பூச்சிக்கொல்லி மாவில் போண்டா! பரிதாபமாக உயிரிழந்த இளம்பெண்…

இந்த விவகாரம் குறித்து அரக்கோணம் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By: April 7, 2020, 9:26:56 AM

Ranipettai woman died of consuming snacks made by pesticide by mistake : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ளது எஸ்.ஆர். கண்டிகை என்ற பகுதி. அங்கு வசித்து வருபவர் பெரியசாமி. அவர் தன்னுடைய மகன் சுகுமார், மருமகள் பாரதி மற்றும் மனைவி லட்சுமி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார்.

மேலும் படிக்க : சென்னையில் மட்டும் 110 பேர்: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிப்பு விவரம்

குவாரண்டைன் காலத்தில் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சுவையாக சமைத்து தர முடிவு செய்த பாரதி, போண்டா சுட நினைத்துள்ளார். தன்னுடைய மாமனார் பெரியசாமியிடம் அதற்கான மளிகைப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வர சொல்லியுள்ளார். கடைக்கு சென்ற பெரியசாமி, மைதா, கடலைமாவுடன், மிளகாய் தோட்டத்திற்கு பயன்படுத்த வேண்டிய பூச்சிக்கொல்லி மாவு ஆகியவற்றையும் அவர் வாங்கி வந்துள்ளார்.

அனைத்தும் ஒரே இடத்தில் இருக்க, அனைத்து மாவினையும் ஒன்றாக கலந்து போண்டா சுட்டிருக்கிறார் பாரதி. வீட்டில் உள்ள அனைவரும் அந்த போண்டாவை சாப்பிட, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பின்னர் சிகிச்சைக்காக நான்கு நபர்களும் சேர்க்கப்பட்ட நிலையில், பாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து அரக்கோணம் தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Ranipettai woman died of consuming snacks made by pesticide by mistake

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X