/tamil-ie/media/media_files/uploads/2018/11/cats-2.jpg)
ரன்வீர் ஷா அலுவலகத்தில் ரெய்டு
ரன்வீர் ஷா அலுவலகத்தில் ரெய்டு : தொடர்ந்து பல மாதங்களாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் பல்வேறு முக்கியப் புள்ளிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனைகள் செய்து கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள், விக்ரகாரங்கள், தூண்கள் ஆகியவற்றை கண்டறிந்து வருகின்றனர்.
ரன்வீர் ஷா அலுவலகத்தில் ரெய்டு
ஷாவின் வீடு, மற்றும் அவரின் நண்பர்களின் வீடுகளைத் தொடர்ந்து, சென்னையில் இருக்கும் கிண்டி ரேஸ்கோர்ஸ்ஸில் அமைந்துள்ள அவரின் அலுவலகத்திலும் சோதனைகளை மேற்கொண்டனர் சிலைக் கடத்தல் தடுப்பு அதிகாரிகள்.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேல் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ரன்வீர் ஷா அலுவலகத்தில் நடத்தபட்ட ஆய்வில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் வாகனங்கள் கண்டறியப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ரன்வீர் ஷாவை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் டி.எஸ்.பி சுந்தரம் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க : சிலைகளை மீட்பதற்கு மத்திய மாநில அரசின் ஒத்துழைப்பு தேவை - பொன். மாணிக்கவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.