Coronavirus : சீனாவில் உருவாக்கிய கொரோனா வைரஸ், இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, ஜெர்மனி, என படிப்படியாக மற்ற நாடுகளையும் தாக்க தொடங்கியது. இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ஆகையால் இந்த வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை அமல் படுத்தியுள்ளது மத்திய அரசு.
PM Modi Speech Live : ஏப்ரல் 5ம் தேதி முக்கியமான நாள் – பிரதமர் மோடி
இந்நிலையில் தற்போதைய சூழலின் படி இந்தியாவில் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 309 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கொரோனா வைரஸின் சமூக பரவலை தடுக்க அரசு மேலும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ரெவ்யூ மீட்டிங்கில் நானும், அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் கலந்து கொண்டோம். எங்களுடன் சுகாதாரம் மற்றும் ரெவென்யூ துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வைரஸ் பரவுவதை மேலும் தடுக்க, கொரோனா பரிசோதனையை வேகப்படுத்த முடிவெடுக்கப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”