Rare band-tail scorpionfish found at Sethukarai coast of Tamil Nadu : வாளை மீன், விலாங்கு மீன் என்றெல்லாம் நாம் கேள்விபட்டிருப்போம் ஆனால் இது ஒரு வகையான அதிசயமீன். தலை மற்றும் செதில் பகுதிகளில் முட்களைக் கொண்ட இந்த மீனை பேண்ட் டைல் ஸ்கார்பியன் ஃபிஷ் (Rare band-tail scorpionfish found at Sethukarai coast of Tamil Nadu) என்று அழைக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
Advertisment
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
இதன் விஷத் தன்மை மற்றும் நிறமாறும் காரணங்களுக்காக அறியப்பட்டிருக்கும் ஸ்கார்பியன் மீன்களை தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கண்டறிந்துள்ளனர். இந்த வகை மீன்கள் இந்தியாவில் பார்ப்பது இதுவே முதன்முறையாம். அதுவும் மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் சேதுக்கரையில் இந்த மீன்களை பார்த்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம் (Central Marine Fisheries Research Institute - CMFRI) மத்திய கடல்மீன்வள ஆராய்ச்சி நிலையம், (Central Marine Fisheries Research Institute - CMFRI) மேற்கொண்ட சர்வேயின் போது இந்த மீன் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த மீனை மற்ற உயிரினங்கள் தாக்க முற்படும் போது, இந்த மீன் தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொள்ளும். வெள்ளை நிறத்தில் பொதுவாக காணப்படும் இந்த மீன், தாக்குதல் வரும் நேரத்தில் கருப்பு நிறமாக மாறிவிடும் என்று மூத்த ஆராய்ச்சியாளர் மருத்துவர் ஆர். ஜெயபாஸ்கரன் அறிவித்தார். இந்த மீனின் முதுகுப் பகுதியில் அமைந்திருக்கும் முட்கள் யாரையாவது குத்தினால் உடனே மரணம் தான். இது ஒரு இரவுநேர உயிரினம் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news