Advertisment

ஒரு ஊசி ரூ.16 கோடி: அரிய வகை நோயால் பாதிக்கபட்ட 3 மாதக் குழந்தை; அரசு உதவ பெற்றோர் கோரிக்கை

தசை நார் சிதைவு நோயால் பாதிக்கபட்ட 3 மாதக் குழந்தையின் சிகிச்சை செலவுக்கு அரசு உதவ வேண்டும் என பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

author-image
WebDesk
New Update
Cbe child.jpg

தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை குணப்படுத்துவதற்கு ரூ. 16 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என்பதால் குழந்தையின் பெற்றோர் அரசிடம் உதவியை நாடி உள்ளனர்.  கோவை கவுண்டர் மில்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் ரமணகுமார்-ஜனனி தம்பதியினர். ரமணக்குமார் தனியார் ஐ.டி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது.  அந்தக் குழந்தை தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான சிகிச்சை அளிப்பதற்கு ரூ. 16 கோடி மதிப்புள்ள ஊசியை செலுத்த வேண்டும் என்பதால் அரசிடம் உதவி வேண்டி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். 

Advertisment

இது குறித்து அவர்கள் கூறுகையில், "தங்கள் குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்திய நிலையில் இதனை குணப்படுத்துவதற்கு பல்வேறு மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டோம். அனைவரும் Zolgen SMA என்ற ஊசியை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தனர். அந்த ஊசியின் விலை ரூ.16 கோடி என்று 

நிதி திரட்டல் 

கூறினர். இவ்வளவு பெரிய தொகையை தங்களால் திரட்ட முடியாது எனக்  கூறிய அவர்கள் தங்கள் நண்பர்கள் உதவியுடன் IMPACT GURU என்ற செயலி மூலம் பணம் திரட்ட முயற்சி செய்து வருகிறோம்.  7845723752 என்ற UPI (PhonePe) மூலமும் பணம் பெற்று வருகிறோம். எனினும் சிலர் குழந்தை பாதிக்கப்பட்டுள்ளதை நம்ப மறுப்பதாகவும் எனவே என்ன செய்வதென்று தெரியாமல் தற்பொழுது மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து தெரிவித்து அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளோம். தமிழக முதல்வரும் குழந்தையின் பிரச்சனையை கவனத்தில் கொண்டு தங்களுக்கு உதவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். 

தற்போது குழந்தைக்கு தொடையிலிருந்து முட்டி வரை தசைநார் சிதைவு பாதித்துள்ள நிலையில் விரைவில் இதனை குணப்படுத்த வேண்டும் எனவும் இல்லையெனில் ஒவ்வொரு பாகங்களிலும் தசைகள் பாதிக்கப்பட்டு நுரையீரலும் பாதிப்படையும் என மருத்துவர்கள் கூறியுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே இச்செய்தியை பார்க்கும் பொதுமக்களும், தனியார் தொண்டு நிறுவனங்களும்  தங்களால் முயன்ற நிதி உதவியை அளித்து உதவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தனர்.

ஈயன்ற பண உதவியை  PhonePe எண்: 7845723752 என்ற எண்ணுக்கு அனுப்பியும் அல்லது IMPACT GURU என்ற செயலி மூலமாக வழங்கி உதவிடுமாறும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். 

இதற்கு முன்பும் இதே போன்று கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு தசைநார் சிதைவு நோய் ஏற்பட்டு இது குறித்தான செய்திகள் வெளிவந்து தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு அக்குழந்தைக்கு உதவியது குறிப்பிடத்தக்கது. 

செய்தி: பி.ரஹ்மான் 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Coimbatore Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment