DMK Chief Karunanidhi Health today: கருணாநிதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ்நிலையில் அவரது நினைவுகளை போற்றும் பதிவுகளை ஐஇ தமிழ் வெளியிடுகிறது.
கருணாநிதி என்ற ஒற்றைச் சொல்லுக்கு குவிந்திருக்கும் மக்கள் செல்வாக்கு என்ன என்பதைக் கடந்த மூன்று நாட்களாக நாம் பார்த்திருப்போம். சூரியன் மறைந்துவிடுமோ என்ற அச்சத்தில் நாத்திகவாதிக்கும் சில கோவில் மணிகள் அடித்தன.
இத்தகைய கூட்டத்துக்கு சொந்தக்காரர் கருணாநிதி என்றாலும், கலைஞர் என்று மக்களால் பெருமிதத்தோடு அழைக்கப்படும் செந்தமிழ் நாயகனின் சொல் வீச்சே அனைவரும் கட்டிப்போட்டு வைத்தது. ஒடுக்கப்பட்டவர்களுக்காக இவர் முன்னிருந்து நடத்திய போராட்டங்களும், இவர் ஆற்றிய சொல் ஒவ்வொன்றும் கூர்மையான வாள் போல் ஆணவத்தை கிழித்தெறிந்தது. சாதி மற்றும் மத வெறிகளுக்கு எதிராக இவர் வீசிய வார்த்தைகள் அனைத்தும் எரிமலையில் இருந்து குமிழ்ந்த நெருப்பு துகள்களாக வெடித்தது. பெண்களின் சம உரிமைகளுக்காக கை கோர்த்து நின்ற நாயகன் இவர்.
உரிமை மற்றும் சுயமரியாதையை நிலைநாட்ட இவர் தூக்கி நிறுத்திய ஒரே வாள் தமிழ். தமிழ்மொழிக்கு இவர் அளித்த முக்கியத்துவம், மக்களுக்கு நல்லாட்சியை வழங்க இவர் எடுத்த அனைத்து முயற்சிகளிலும் பாராட்டிற்குரியது. இவரின் பல பேச்சுகள் வரலாற்றில் இருந்து நம் மனதை விட்டும் அகலாது என்பதை நிரூபிக்கும் வகையில் தொடுக்கப்பட்ட செய்தி தொகுப்பு இது.
1988ல் படங்கள் குறித்து அவர் பேசியது:
கரகரத்த காந்த குரலில் தெரிவித்த தமிழ் புத்தாண்டு வாழ்த்து:
'மறக்க முடியுமா?’ - இந்த பேச்சை மறக்க முடியுமா?
பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு, கருணாநிதி ஆற்றிய இரங்கல்:
கருணாநிதிக்கு 92 வயது இருக்கும்போது, ஜெயலலிதா ஆட்சியில் அரசுக்கு எதிராக அவர் பேசினார். அதற்காக அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் மீண்டும் அரசை சாடினார். இதனை பலராலும் மறக்க முடியாது.