சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் கேண்டீனில் எலி சாப்பிட்ட திண்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த கேண்டீனை மூட மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார்.
சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தனியார் நடத்தி வந்த கேண்டீனில் விற்பனைக்கு வைத்திருந்த வடை, பஜ்ஜி போன்ற திண்படங்கள் மீது எலி ஒன்று அமர்ந்து அந்த திண்பண்டங்களை சாப்பிடக் கூடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் எலி சாப்பிட்ட திண்பண்டங்களை விற்பனை வைத்திருந்ததாக புகார் எழுந்தது. எலி சாப்பிட்ட உணவுப் பொருட்களை மக்கள் வாங்கி சப்பிடுவதால் என்று பொதுமக்கள் கேண்டீனில் வாக்குவாதத்தில் ஈடுஅப்ட்டனர்.
இந்நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை கேண்டீனில் எலி சாப்பிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்வதாக புகாருக்குள்ளான தனியார் கேண்டீனை மூடுமாறு மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவு பிறப்பித்துள்ள்ளார்.
மேலும், எலி சாப்பிட்ட உணவை மக்களுக்கு விற்பனை செய்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, இதையடுத்து, அந்த கேண்டீனில் உள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு பையில் போட்டு மக்கள் உட்கொள்ளாத வண்ணம் தூக்கி எரியுமாறு ஸ்டானில் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“