The camp is scheduled to be held at 19 Zonal Assistant Commissioner's Offices in Chennai : இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் ரேஷன் கார்டு இன்றியமையாத ஒரு தேவையாக உள்ளது. அதியாவசிய பொருட்கள் பெருவதற்கு மட்டுமல்லாமல், அடையாள அட்டையாவும், முகவரி ஆதரமாகவும் பயன்படும் இந்த ரேஷன் கார்டு அரசியன் பல்வேறு திட்டங்களி்ன் பயன்களை பெறுவதற்கும் உதவுகிறது.
இதனால் ரேஷன் கார்டு வேண்டி புதிதாக திருமணமானவர்கள் பலரும் விண்ணப்பித்து வரும் நிலையில், ஏற்கனவே ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் அதில் திருத்தம் செய்ய வேண்டி இணையதள சேவை மையத்தை நாடி வருகின்றனர். இதில் தற்போது ரேஷன் கார்டில் மாற்றம் செய்ய வேண்டும் என்பவர்களுக்காக தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி ரேஷன் கார்டில், பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு அல்லது மாற்றம் மற்றும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு குறைதீர் கூட்டம் மூலம் நிவர்த்தி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ரேஷன் கார்டில் மாற்றம் மற்றும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொதுமக்களின் சேவைகளை உறுதி செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் குறைதீர் முகாம் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி மே மாதத்திற்காக மாதாந்தி குறைதீர் முகாம் வரும் 14-ந் தேதி (நாளை) சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாமில் ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சினைகள் மட்டுமல்லாது, நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் வாங்க வர இயலாத மூத்த குடிமகன்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட பயணாளிகளுக்கு அங்கீகார சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நியாயவிலைக்கடைகளின் செயல்பாடு, மற்றும் தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால் இந்த முகாமில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள 19-மண்டலங்களில் மட்டும் நடத்தப்படும் இந்த குறைதீர் முகாம் விரைவில் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ரேஷன் கார்டு தொடர்பான பிரச்சினைகளில் சிக்கியுள்ள மக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.