ration card free mask : தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
முகக்கவசம் அணிவது மிக அசெளகரியமாக இருந்தாலும் கட்டுப்பாட்டுக்கு பயந்து தொற்றுக்கு பயந்து மக்கள் அணிய பழகிக்கொண்டார்கள். மாஸ்க் அத்தியாவசிய பொருள்களில் ஒன்றாக இன்று மாறிவிட்டது. இன்று சாலையோர கடைகள் முதல் பல் பொருள் அங்காடி வரை மாஸ்க் விற்பனை செய்யப்படாத இடமே இல்லை எனலாம்.
தற்போது முகக்கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு அபராதம் விதிப்பதும் உண்டு.கொரோனா தொற்று வராமல் தடுக்க உதவும் முகக்கவசம் நமக்கு பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை மக்கள் உணர வேண்டிய தருணம் என்பதால் ,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே வரும் போது அனைவருமே முகக்கவசம் அணிந்து வர வேண்டிய நிலையாகி விட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரார்களுக்கும் இலவசமாக முகக்கவசம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 2,08,23,076 குடும்ப அட்டைகளில், 6,74,15,899 குடும்ப உறுப்பினர்கள் உள்ளனர் என கணகெடுக்கப்பட்டுள்ளது.
இதனைக் கொண்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்ற அடிப்படையில், 13,48,31,798 மறு பயன்பாடு துணி மாஸ்க்குகள் வழங்கப்பட உள்ளது. இதனால், 13 1/2 கோடி முககவசங்களை கொள்முதல் செய்வதற்காக விலை நிர்ணயக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு முதல் மரணம் வரை ஷாட் ரிப்போர்ட்!
இந்தக் குழுவின் தலைவராக வருவாய் நிர்வாக ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து, இயற்கை பேரிடர் மேலாண்மை இயக்குனர், பொதுசுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்குனர் உள்பட 6 பேர் அந்தக் குழுவில் இடம் பெறுவார்கள் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil