Advertisment

ரேஷன் கார்டில் திருத்தம் செய்யணுமா? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!

ரேஷன் அட்டை குறைதீர்ப்பு முகாம் ஜூலை 13ஆம் தேதி சென்னை மண்டல அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 1 மணிவரை நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
RATION CARD.jpg

ரேஷன் கார்டு குறைதீர்ப்பு முகாம்

தமிழ்நாடு அரசு, ரேஷன் அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வசதியாக ஒவ்வொரு மாதமும் மண்டலம் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இதில் ரேஷன் பொருள்கள் தொடர்பான புகார்கள் மற்றும் அதிகாரிகள் குறித்தும் புகார் அளிக்கலாம்.

இந்த நிலையில் இம்மாதம் பயனாளிகளுக்காக குறைதீர்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது. சென்னை மண்டல உதவி ஆணையர் வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்த குறைதீர்ப்பு முகாமில் பயனாளிகள் திருத்தங்கள் மற்றும் குறைகள் ஏதேனும் இருப்பினும் தெரிவித்துக்கொள்ளலாம். மேலும், இந்த குறைதீர்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் அங்கீகாரச் சான்றினையும் பெற முடியும்.

Advertisment

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Ration Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment