ஏசி, கார், சொந்த வீடு உள்ளிட்ட சில வசதிகளை பெற்றிருந்தால் அவர்களின் ரேஷன் கார்டில் பல்வேறு சலுகைகள் ரத்து செய்யபடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் எந்த ஒரு சலுகையை பெற ரேஷன் கார்டு இன்றியமையாதது. ஆதார் கார்டின் அறிமுகத்திற்கு முன்பு வரை தனி மனிதர் அடையாளமாக ரேஷன் அட்டை எடுத்துக் கொள்ளப்படும். இப்போது இந்த ரேஷன் கார்டு ஸ்மார்ட் கார்டாக மாறியுள்ளது.
இந்நிலையில், ரேஷன் கார்டில் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளை பெற தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. வசதி படைத்தவர்கள் பலரும் ரேஷன் கார்டுகளை வைத்து மானிய விலையில் பொருட்களை வாங்கி வருவதாகவும், அரசு நிதி போன்ற சலுகைகளை பெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு செய்யும் படி அரசு உத்தரவு பிற்பித்துள்ளது.
அதன்படி முன்னுரிமை பிரிவில் இருந்து நீக்கப்பட வேண்டிய குடும்பங்களுக்கான சில விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.குடும்பம் மானியம் பெற தகுதியில்லாத குடும்பங்கள் தனியாக பிரிக்கப்படுகின்றன. இக்குடும்பங்கள் முன்னுரிமை பெற தகுதியுள்ள குடும்ப அட்டைகளை பயன்படுத்தினால் தற்போது அது மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1. ஏசி மற்றும் கார் வைத்திருப்பவர்கள்.
2. மத்திய, மாநில, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் அல்லது ஓய்வு பெற்ற அதிகாரி
3. 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயி
4. வருமான வரிச் செலுத்தும் நபரை குறைந்தது ஒரு உறுப்பினராக கொண்ட குடும்பம், தொழில் வரிச் செலுத்துவோரை உறுப்பினராக கொண்ட குடும்பம்.
5. 3 அல்லது அதற்கும் மேல் அறைகளை கொண்ட கான்கிரீட் வீடுகள் உள்ள குடும்பம்.
6. வணிக நிறுவனங்களை பதிவு செய்து செயல்படுத்தும் குடும்பம்.
7. ரூ. 1 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறும் குடும்பம்
மேற்கூறிய அனைத்தும் பெற்றிருக்கும் குடும்பங்கள் இதுவரை மானியங்கள் பெற்று வந்தால் அவை தடை செய்யப்படும். என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது இதற்கான ஆய்வு பணி தொடங்கப்பட்டுள்ளது.