தமிழகம் முழுவதும் அரசின் நியாய விலை கடை மூலம் குறைந்த விலையில் மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகிறது. பாமாயில் எண்ணெய், அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், சில ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது எடை குறைவதாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வருகின்றன. இதை தீர்க்கும் வகையில், பொருட்களை பாக்கெட் செய்து விற்பனை செய்ய உணவுப்பொருள் வழங்கல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு உணவுப்பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
அடுத்தக்கட்டமாக சோதனை அடிப்படையில் 234 தொகுதிகளிலும் தலா 1 ரேஷன் கடையை தேர்வு செய்து பாக்கெட் உணவுப்பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு மக்களிடையே கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் விரிவுப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“