அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய மண்டல் இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதில், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாள்களுக்கு 'No work no pay' என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பு வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து கடைகளை திறக்கவும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள்கள் போராட்டம் அறிவித்த நிலையில், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil