Advertisment

ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தம் - 'No work No pay' முறையை கையிலெடுக்கும் அரசு

நியாய விலைக்கடைப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடுவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
Jun 07, 2022 09:58 IST
Notification of 231 Vacancies in Trichy District Ration Shops

விண்ணப்பிப்பது தொடர்பாக TNCOOP DEPT என்ற வலையொளி தளத்திலும் காணொலி பதிவேற்றம் கொடுக்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் ஜூன் 9 ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நியாயவிலைக் கடை பணியாளர்கள் அறிவித்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய மண்டல் இணைப் பதிவாளர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட நாள்களுக்கு 'No work no pay' என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களின் விவரங்களை நாள்தோறும் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பு வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக மாற்று ஏற்பாடு செய்து கடைகளை திறக்கவும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாள்கள் போராட்டம் அறிவித்த நிலையில், சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Protest #Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment