ரேஷன் கடை ஊழியர்கள், நீண்ட நாட்களாகவே போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை அமல்படுத்தி வேண்டும் என்று கோரி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
அவர்களின் கோரிக்கைகளில், பொது விநியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், தமிழக அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
அத்துடன், அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளையும் வலியுறுத்தி வருகிறார்கள்.
முக்கியமாக, ரேஷன் கடைகளை பொதுவிநியோக திட்டத்தின் ஒரே துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
போராட்டத்திற்கான காரணம் என்னவென்றால், கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகள், வருவாய்த்துறை நிர்வாகத்திலும், டிஎன்சிஎஸ் நிர்வாகத்திலும், கூட்டுறவு துறை நிர்வாகத்திலும் சேர்ந்து பார்க்கப்படுகிறது.. இதனால், நடைமுறை சிக்கல்ள் நிறைய ஏற்படுவதாகவும், இவைகளை களைய வேண்டும் என்றால், பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், என்பதே ரேஷன் கடை ஊழியர்களின் கருத்தாக உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil