Advertisment

முதல் நாளே மோடியின் கவனத்தை பெற்ற ரவீந்திரநாத் குமார்...ஜெய்ஹிந்த் தொடங்கி கன்னிப்பேச்சு வரை டாப் தான்!

2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார் ரவீந்தரநாத்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

Raveendranath Kumar First Speech in Parliament : அதிமுக- வின் தற்போது தனி ஒரு எம்பி என்று அழைப்படுபவர் ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத் குமார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் நின்று ஓட்டு மொத்த அதிமுகவுக்கு மிகப் பெரிய ஆறுதலை வாங்கி தந்தார் ரவீந்தரநாத்.

Advertisment

அதிமுக போட்டியிட்ட அனைத்து இடங்களில் தோல்வியை தழுவிய போதிலும், தேனி தொகுதி மட்டும் அக்கட்சிக்கு கைக்கொடுத்தது. தேர்தல் முடிவுக்கு முன்பே கோயில் கல்வெட்டில் ரவீந்தரநாத் பெயர் எம்பி என புனைப்பெயருடன் இடம் பெற்றிருந்தது.

எம்பி ஆவதற்குள்ளே இத்தனை சர்ச்சைகளா? என தொடர்ந்து ரவீந்தரநாத் பெயர் கட்சி அலுவலகத்திலும், டிவி சேனல்களிலும் இடம் பெற்றிருந்தது. ஆனால் கடைசியில் கல்வெட்டு நிஜமானது. ரவீந்தரநாத் தேனி தொகுதியில் தனக்கு எதிராக போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.எஸ் இளங்கோவனை தோற்கடித்து அரியணை ஏறினார்.

இந்த வெற்றி அதிமுகவுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அக்கட்சி மட்டுமில்லை ஒட்டு மொத்த தமிழகத்திற்கு தெரியும். ரவீந்தரநாத்தை வெற்றி பெற செய்ய அவரின் தந்தையும் துணை முதல்வருமான ஓபிஎஸ் எவ்வளவு மெனக்கெடுத்தார் என்பது தேனி தொகுதி மக்கள் நன்கு அறிவர். வெற்றி தோல்வியை தாண்டி இது கவுர பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ரவீந்தரநாத் வெற்றி பெற்றார் என்ற தகவல் வெளியானதும் ஓபிஎஸ் ஆனந்த கண்ணீரில் மூழ்கினார் என்ற செய்தியும் ஒருபக்கம் வந்துக் கொண்டுடிருந்தது.

சரி மகன் எம்பியாகி விட்டான். அடுத்து அவனை எப்படியாவது அதிமுக அமைச்சராக மாற்றிவிட என்று ஓபிஎஸ் பல முயற்சிகளை மேற்கொண்டார். அமைச்சரவை பதவியேற்பின் போது டெல்லி சென்று தவம் இருந்தார்.ஆனால் அவரின் முயற்சிகள் அனைத்தும் வீண் போனது. அதிமுக-வில் நிலவிய உள்கட்சி பூசல் காரணமாக அமைச்சரவையில் இடம் தட்டி போனது. உங்கள் பிரச்சனைகளை முடித்து விட்டு வாருங்கள் என கூறி மோடி ஓபிஎஸ் மற்றும் அவரது மகனை அனுப்பி வைத்தார். பெரும் எதிர்பார்ப்பு உடன் சென்ற இருவரும் விரக்தியில் தமிழகம் திரும்பினர்.

அதன் பின்பு இந்த பேச்சு எல்லாம் ஓரங்கட்டப்பட்டது.தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை பூதாகரமாக வெடித்த நிலையில் அதிமுகவினர் அதில் பிஸியாகினர். அமைச்சர்கள் தற்போது தண்ணீர் பிரச்சனை குறித்த களப்பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று டெல்லியில் 17-வது மக்களவையின் முதல் கூட்டம் நடைப்பெற்றது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். தொகுதி வரிசை வாரியாக தமிழக எம்.பி.க்கள் பதவியேற்றனர்.

அதில் அதிமுக தேனி தொகுதி எம்பி ரவீந்தரநாத் குமாரரும் ஒருவர். அதனைத் தொடர்ந்து இன்று ரவீந்தரநாத்தின் முதல் கன்னிப்பேசு மக்களவையில் அரங்கேறியது. 2.10 நிமிடம் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார் ரவீந்தரநாத்.

ரவீந்தரநாத் தனது உரையை தொடங்கியது முதல் அவரின் பேச்சை உன்னிப்பாக கவனிக்க தொடங்கினார் பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் பார்வை தன்னை நோக்கி வருவதை உணர்ந்த ரவீந்தரநாத் ஆரம்பத்தில் சற்று பதற்றம் அடைந்தாலும் தைரியமாக பேசி வணக்கத்துடன் உரையை நிறைவு செய்தார்.

ரவீந்தரநாத் கன்னிப்பேச்சி இடம்பெற்ற சில சுவாரசியமான வரிகள் இதோ தமிழில்..

“ தேனி நாடாளுமன்ற உறுப்பினராக நான் வருவதற்குக் காரணமாக இருந்த ஜெயலலிதா அம்மாவுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். நான் இந்த இடத்திற்கு புது வருகை. ஆனால் உங்களை போன்ற சீனியர்களின் துணையுடன் அனைத்தையும் செய்ய முடியும் என நம்புகிறேன்.

நாங்கள் (தமிழர்கள்) தாய்நாட்டுக்கும், தாய் மொழிக்கும் முதல் மரியாதை கொடுப்போம். . தமிழ்நாடு எப்போதும் ஒரு முற்போக்கான மாநிலமாக இருந்து வருகிறது.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் பேரறிஞர் அண்ணா.

ஏழைகளுக்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்தவர் எம்.ஜி.ஆர். அதேபோல ஏழைகளுக்காகப் பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர் ஜெயலலிதா.தமிழகத்துக்கு மத்திய அரசிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன.மத்திய அரசு மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. வணக்கம்”

Aiadmk Ops Parliment Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment