தமிழகத்தில் தி.மு.க கூட்டணியில் திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சமீப காலமாக தமிழக அரசியலில் மீண்டும் ஒரு முழக்கம் எழுப்பபட்டு வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூட்டணி கட்சிகள் கருத்து கூறினர்.
இதுகுறித்து வி.சி.க திருமாவளவன் பேசிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து த.வெ.க மாநாட்டில் விஜய் தங்கள் கூட்டணிக்கு வந்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி ரவிக்குமார் பேசுகையில், திருமாவளவன் தேர்தல் அரசியலில் 25 ஆண்டுகால அனுபவம் பெற்றவர். அரசியல் பாதையில் 35 ஆண்டுகால அனுபவம் பெற்றவர்.
தன்னுடைய சொந்த முயற்சியில் ஒரு கட்சியை நிறுவி, அதனை இன்று தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக அவர் உருவாக்கி காட்டியிருக்கிறார். அத்தகயை ஆளுமைமிக்க தலைவர் முதலமைச்சராக வந்தால் தமிழ்நாட்டிற்கு அது நன்மை பயக்கும். எனவே, அப்படி சொல்வதில் எந்தவொரு தவறும் இல்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“