நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம்; ரவிக்குமார் கேள்விக்கு மத்திய அரசின் பதிலில் அம்பலம்

வி.சி.க எம்.பி ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில், நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வி.சி.க எம்.பி ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில், நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Ravikumar MP speech

வி.சி.க எம்.பி டாக்டர் து. ரவிக்குமார்

வி.சி.க எம்.பி டாக்டர் து.ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில், நூலகங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தமிழ்நாட்டுக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

வி.சி.க எம்.பி ரவிக்குமார், ராஜாராம் மோகன்ராய் லைப்ரரி ஃபவுண்டேஷனால் 204-15 முதல் கடந்த 10 ஆண்டுகளில் மாநிலங்களிலிருந்து பெறப்பட்ட, ஒப்புதல் தரப்பட்ட,  நிராகரிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்களைத் தருக  என்றும் அந்தத் திட்டங்கள் நிறைவு பெற்றனவா என்ற விவரங்களைத் தருக என்றும்  கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் எழுத்துபூர்வமாக விடையளித்துள்ளார். அதில், “ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்கள் வாரியாக ஒப்புதல் அளிக்கப்பட்ட / விடுவிக்கப்பட்ட நிதி எவ்வஅவு என்ற விவரங்களை அளித்துள்ளார். 

இந்த பதில் குறித்து ரவிக்குமார் எம்.பி குறிப்பிடுகையில், “இந்தியாவில் மொத்தமுள்ள பொது நூலகங்களில் நான்கில் மூன்று பங்கு தென் மாநிலங்களில்தாம் உள்ளன. ஆனால், குஜராத் மாநிலத்துக்கு அதிக அளவிலான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி இருந்தவரை ஒப்பீட்டளவில் அதிக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு (2021) நிதி குறைக்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 2014 முதல் தமிழ்நாட்டுக்கு நூலகக்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை பட்டியலிட்டுள்ளார். 

Advertisment
Advertisements

2014-15 ஆம் ஆண்டில் 4571  திட்டங்களுக்கு ரூ 51634057 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

2015-16 ஆம் ஆண்டில் 2303 திட்டங்களுக்கு ரூ 59176420 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

2016-17 ஆம் ஆண்டில் 4534 திட்டங்களுக்கு ரூ 6329493 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

2017-18 ஆம் ஆண்டில் 5207 திட்டங்களுக்கு ரூ  100711709 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

2018-19 ஆம் ஆண்டில்  1062 திட்டங்களுக்கு ரூ 96605385 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

2019- 20 ஆம் ஆண்டில் 1651 திட்டங்களுக்கு ரூ 39838421 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

2020- 21 ஆம் ஆண்டில் 1126 திட்டங்களுக்கு ரூ 20302195 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

2021- 22 ஆம் ஆண்டில் 7 திட்டங்களுக்கு ரூ 1527705 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

2022- 23 ஆம் ஆண்டில் 7 திட்டங்களுக்கு ரூ 1440000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

2023- 24 ஆம் ஆண்டில் 1071 திட்டங்களுக்கு ரூ 40313606 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

2024- 25 ஆம் ஆண்டில் 2 திட்டங்களுக்கு ரூ 375000 நிதி விடுவிக்கப்பட்டுள்ளது; 

தி.மு.க ஆட்சி அமைந்ததற்குப் பிறகு நான்கு ஆண்டுகளுக்கும் சேர்த்து 1087 திட்டங்களுக்கு மட்டுமே நிதி வழங்கப்பட்டிருக்கிறது. 

நிதி ஒதுக்குவதில் எப்படி ஒன்றிய பாஜக அரசு அரசியல் அடிப்படையில் பாரபட்சம் காட்டுகிறது என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.” என்று ரவிக்குமார் எம்.பி தெரிவித்துள்ளார்.

Ravikumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: