Advertisment

'பாராயணம் பாட வைக்கும் பழமைப் பெண் திட்டம்': அறநிலையத்துறை மீது ரவிக்குமார் எம்.பி. தாக்கு

பள்ளி மாணவிகளை பாராயணம் பாடச் சொல்லி பழமைப் பெண் திட்டத்தை இந்து அறநியலத்துறை செயல்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ravikumar and hrce

தமிழகத்தில் பள்ளி மாணவிகளை கந்த சஷ்டி நிகழ்விற்காக பாராயணம் பாட வைத்து பழமைப் பெண் திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் விமர்சித்துள்ளார்.

Advertisment

முன்னதாக, சென்னை திருவான்மியூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவிகள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளி மாணவிகள் 69 பேரும், கபாலீஸ்வரர் கோவில் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் 51 பேரும் என மொத்தம் 120 பேர் பங்கேற்று கந்த சஷ்டி கவசம் பாராயணம் பாடினர். இந்த நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்ததுடன், கந்தசஷ்டி பாராயணம் பாடிய அனைத்து மாணவிகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டினார்.

இதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் பாராயணம் பாடும் நிகழ்ச்சிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மே 17 இயக்கத்தினரும் இது தொடர்பாக கடுமையாக கண்டனம் தெரிவித்து, முதலமைச்சர் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியிருந்தனர். இதேபோல், அரசியல் பிரமுகர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தி.மு.க கூட்டணி கட்சியாக விளங்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், 

"‘புதுமைப் பெண்’ திட்டத்துக்கு எதிராகப் ‘பழமைப் பெண்’ திட்டமா? 

தமிழ்நாட்டில் அதிக அளவில் பெண்கள் கல்லூரிக்குப் போகவேண்டும் என்பதற்காக ‘புதுமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள். அவரது நல்ல நோக்கத்துக்கு மாறாக பள்ளி மாணவிகளைப் பாராயணம் பாடச் சொல்லி  ‘பழமைப் பெண்’ திட்டத்தைச் செயல்படுத்துகிறார் மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்கள். 

கல்வியின் மதச்சார்பற்ற தன்மையைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ‘அறநிலையத்துறை நடத்தும் கல்வி நிறுவனங்களைப் பள்ளி, கல்லூரித் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்’ என்று கேட்பது தவிர வேறு வழியில்லை"  எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

இதே விவகாரத்தில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனும் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Vck Ravikumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment