கலைஞர் கருணாநிதி 2006 ஆண்டிலேயே வீட்டுப் பணியாளர்கள் நல வாரியம் அமைத்தவர் என பெருமிதமாக, இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் வீட்டுப் பணியாளர் அமைப்பினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் வி.சி.க சார்பில் பங்கேற்ற எம்.பி ரவிக்குமார் ஆதரவு தெரிவித்து பேசினார்.
இதுதொடர்பாக ரவிக்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;
தமிழ்நாட்டில் நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது (2006-11) வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் வீட்டுப் பணியாளர் நலவாரியம் துவக்கியதை நினைவுகூர்ந்தேன். இன்று அவர்களது கோரிக்கைகளைத் தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் கடிதம் அளித்து வலியுறுத்தியதையும் தெரிவித்தேன்.
வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கென தனி சட்டம் வேண்டும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டாவியா அவர்களிடம் இன்று கடிதம் அளித்து வலியுறுத்தினேன்.
மேலும், பணி செய்யும் வீட்டைப் பணியிடமாக அறிவிக்க வேண்டும். வீட்டுப் பணியாளர்களுக்குக் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். வீட்டுப் பணியாளர்களை ஈ.எஸ்.ஐ, பி.எஃப் திட்டங்களில் சேர்க்க வேண்டும். வீட்டுப் பணியாளர்களுக்கு நகரங்களில் குறைந்த செலவில் தங்குமிடம் வழங்க வேண்டும் முதலான கோரிக்கைகளையும் கடிதத்தில் எழுப்பியுள்ளேன்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“