அ.தி.மு.க அணையப்போகும் விளக்கு அல்ல; கலங்கரை விளக்கம் - அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் பதிலடி

“அ.தி.மு.க அணையப்போகும் விளக்கு அல்ல; நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்; அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

“அ.தி.மு.க அணையப்போகும் விளக்கு அல்ல; நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்; அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
RB Udhayakumar Annamala

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் - பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

“அ.தி.மு.க அணையப் போகும் விளக்கு” என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில்,  “அ.தி.மு.க அணையப்போகும் விளக்கு அல்ல; நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்; அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை” என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

Advertisment

உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை தமிழ்நாடு வருகையையொட்டி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காரைக்குடி செட்டிநாட்டுக்கு வியாழக்கிழமை (மே 30) வந்திருந்தார்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை  “

மோடி, அமித் ஷா ஆகிய இரு பெரும் தலைவர்களும் தேர்தல் தொடக்கத்திலும், முடிவிலும் தமிழகத்துக்கு வந்துள்ளனர். அதனால் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் அதில் தமிழகம் பெரும் பங்கு வகிக்கும்.

ஜூன் 4-க்கு பின்னர் அ.தி.மு.க எங்கே இருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். அ.தி.மு.க, பா.ஜ.க எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்பதையும் பார்ப்போம். எந்தக் கட்சி மக்கள் மனதை பிடித்திருக்கிறது. எந்தக் கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது என்பதை பார்ப்பீர்கள். விளக்கு அணையும்போது பிரகாசமாக எரியும் என்பர். அதனால், அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர்.” என்று கூறினார். 

Advertisment
Advertisements

தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலையின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “அ.தி.மு.க அணையப்போகும் விளக்கு அல்ல; நாட்டு மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கம்; அண்ணாமலைக்கு வரலாறு தெரியவில்லை; விளம்பர வெளிச்சத்தில் அரசியல் செய்கிறார்; தமிழ்நாட்டிற்காக அண்ணாமலை என்ன செய்தார் என பட்டியலிட முடியுமா? அ.தி.மு.க-வை அழிக்கப் பார்க்கும் அண்ணாமலையை மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

R B Udhaya Kumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: