/indian-express-tamil/media/media_files/2025/11/01/rb-udhayakumar-condemn-o-panneerselvam-ttv-dhinakaran-kasengottaiyan-aiadmk-tamil-news-2025-11-01-12-02-08.jpg)
“அம்மா அவர்கள் உருவாக்கிய கழகத்தை கோடிக்கணக்கான தொண்டர்களின் இதயத்தைப் போல நொறுக்கி விட்டார். அந்த வேதனையை அவருக்கு தெரியுமா தெரியாதா?" என்று ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், சிவகங்கை மாவட்டத்தில் “தி.மு.க தான் அடுத்த ஆட்சியைப் பிடிக்கும்” என வாய் கூசாமல் தெரிவித்து, அ.தி.மு.க தொண்டர்களின் மனதை நொறுக்கி விட்டதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட காணொளியில் கூறியதாவது:-
அம்மா அவர்கள் உருவாக்கிய கழகத்தை கோடிக்கணக்கான தொண்டர்களின் இதயத்தைப் போல நொறுக்கி விட்டார். அந்த வேதனையை அவருக்கு தெரியுமா தெரியாதா? நடைப்பயிற்சியின் போது முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து, அவருடைய இல்லத்திற்கு சென்று வாழ்த்து வழங்கிய சம்பவம், அ.தி.மு.க தொண்டர்களின் இதயத்தில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இன்று நம்மிடத்தில் இல்லையென்றாலும், அ.தி.மு.க தொண்டர்கள் வெறுக்கும் அனைத்தையும் அவர் செய்து வருகிறார். அதிகாரமும், பதவியும் இன்றி இன்று அம்மா கொடுத்த அங்கீகாரத்தையும் இழந்து, எதிரிகளின் வியூகத்திற்காக தன்னை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்து வருகிறார்.
சிவகங்கை என்ற புண்ணிய பூமியில் கருப்பு நாடகத்தை நடத்தி வருகிறார் ஓ.பி.எஸ். இன்று அதற்கான விளைவாக ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். அரசியலில் விசுவாசமும் கொள்கையும் இழந்தவர்கள் எப்போதும் பூஜ்ஜியங்களாகவே மாறுவர். தி.மு.க-வின் அஜெண்டாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் பூஜ்ஜியங்களுக்கு வரலாற்றில் இடம் கிடையாது. அ.தி.மு.க-வின் உண்மையான தொண்டர்கள் இதை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.
அ.தி.மு.க-வை அழிக்கும் வியூகத்தோடு பசும்பொன்னில் தேர்தல் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர். பசும்பொன்னில் நடந்த நாடகத்திற்கு கதை வசனம் எழுதியவர் செங்கோட்டையன். அதனால்தான் ஒழுங்கு நடவடிக்கை. அவர் அ.தி.மு.க தொண்டர்களால் செங்கோட்டையன் பூஜியம் ஆக்கப்படுவார். தி.மு.க-வின் அஜண்டாவை செயல்படுத்த அவர்களின் பி டீமாக செயல்படுபவர்களை அ.தி.மு.க தொண்டர்கள் நம்ப மாட்டார்கள்.
இவ்வாறு ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us