Advertisment

ஓ.பி.எஸ் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைப்பா? ஆர்.பி உதயகுமார் பேட்டி

மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பின் அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைகிறாரா ஓ.பி.எஸ்? மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பரபரப்பு பேட்டி

author-image
WebDesk
New Update
OPS and RB Udhayakumar

மக்களவை தேர்தல் முடிவுகளுக்குப் பின் அ.தி.மு.க.,வில் மீண்டும் இணைகிறாரா ஓ.பி.எஸ்? மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பரபரப்பு பேட்டி

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அ.தி.மு.க.,வில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

மதுரையில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய ஆர்.பி உதயகுமார், "அ.தி.மு.க.,வில் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் சேர்ப்பதாக வரும் செய்திகள் துளியும் உண்மை இல்லை. அ.தி.மு.க தனது வரலாற்றில் அதிக அளவில் வழக்குகளை சந்தித்ததில்லை. அ.தி.மு.க.,வை அதிக வழக்குகளை சந்திக்க வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பி.எஸ் தனது சுயலாபத்துக்காக, பதவிக்காக அ.தி.மு.க மீது பல்வேறு வழக்குகளை தொடர்ந்து தாக்கல் செய்தவர்.

அ.தி.மு.க பிரிவதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் ஓ.பி.எஸ். தனக்குப் பதவி இல்லை என்பதால் அ.தி.மு.க.,வை பிரிக்க திட்டமிட்டார். கட்சியின் முக்கியத்துவம், நலன் கருதி ஓ.பி.எஸ் மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைக்கப்பட்டார். அ.தி.மு.க.,வின் முக்கிய முடிவுகளுக்கு மறுப்பு தெரிவிப்பார் அல்லது மௌனம் காப்பார். 

ஓ.பி.எஸ்-ன் நடவடிக்கைகளால் அ.தி.மு.க வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி பெற்றது அ.தி.மு.க.,வின் வெற்றி ஓ.பி.எஸ்-ன் வெற்றி அல்ல.

இரட்டை இலைக்கு எதிராக போட்டியிட்ட ஓ.பி.எஸ்-ஐ எந்த வகையில் ஏற்க முடியும்?. அ.தி.மு.க.,வை குழி தோண்டி புதைக்கும் நடவடிக்கையில் ஓ.பி.எஸ் ஈடுபட்டார். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்பு ஓ.பி.எஸ்-ஐ அ.தி.மு.க.,வில் சேர்க்க திட்டம் என ஊடகங்கள் எந்த ஒரு ஆதாரம் இன்றி செய்தி வெளியிடுகின்றன. அ.தி.மு.க.,வில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் இணைய உள்ளதாக வெளிவரும் தகவலில் உண்மை இல்லை. தொண்டர்களின் எண்ணத்தின் அடிப்படையில் அ.தி.மு.க.,வை எடப்பாடி பழனிச்சாமி வழிநடத்தி செல்கிறார். எந்த காலத்திலும் ஓ.பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் இணைக்கப்போவதில்லை என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் ஒப்புதலோடு சொல்கிறேன்.

தேர்தலின்போது அ.தி.மு.க.,வுடன் யார் கூட்டணி பேசுகிறார்களோ அவர்களை டெல்லியில் இருந்து வந்து தூக்கிச் சென்றனர். ஆளுநர் ஆக்குகிறோம், மத்திய அரசில் அமைச்சர் ஆக்குகிறோம் என சொல்லி எங்களுக்கு இடையூறு செய்தனர்

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரைவேக்காடு என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும். அண்ணாமலை பேச்செல்லாம் பொய்யானது. அண்ணாமலை கர்நாடகாவில் என்ன பேசினார் என தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். தனது கட்சியோடு கூட்டணி வைத்தால் தமிழ்நாட்டையே பட்டா போட்டு தருவதாக கூறினார்கள்.” இவ்வாறு ஆர்.பி உதயகுமார் கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Aiadmk Ops
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment