அரசியலில் விஜய் கை குழந்தை: ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்

"த.வெ.க தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக அரசியல் கை குழந்தையாக உள்ளார். கட்சியை தொடங்கியவுடன் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பது ஒரு கனவு மட்டுமே" என்று ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். 

"த.வெ.க தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக அரசியல் கை குழந்தையாக உள்ளார். கட்சியை தொடங்கியவுடன் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பது ஒரு கனவு மட்டுமே" என்று ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். 

author-image
WebDesk
New Update
RB Udhayakumar slams Vijay TVK Maanadu in Madurai Tamil News

"த.வெ.க தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக அரசியல் கை குழந்தையாக உள்ளார். கட்சியை தொடங்கியவுடன் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பது ஒரு கனவு மட்டுமே" என்று ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். 

தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க குறித்து விமர்சித்து பேசியிருந்தார். இந்நிலையில், அவரது பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அக்கட்சியின் தலைவர்கள் விஜயை விமர்சித்து வருகிறார்கள். 

Advertisment

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயை கடுமையாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் செப்டம்பர் முதல் வாரத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டை காக்க வந்த அவதார புருஷன் போல விஜய் தன்னை நினைத்துக் கொள்கிறார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யாரும் கட்சி தொடங்கலாம், மாநாடு நடத்தலாம். ஆனால் மாநாட்டில் பேசும் உரைகளுக்கு ஒரு வரையறை இருக்க வேண்டும். 

விஜயின் அரசியல் ஆசான் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. அண்ணா, எம்.ஜி.ஆர் இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் நடத்த முடியாத காரணத்தால், அவர்களை நினைவுகூர்ந்து பேசுகிறார். அ.தி.மு.க குறித்து விமர்சனம் செய்வதை தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். த.வெ.க தலைவர் விஜய் ஒன்றரை ஆண்டாக அரசியல் கை குழந்தையாக உள்ளார். கட்சியை தொடங்கியவுடன் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைப்பது ஒரு கனவு மட்டுமே" என்று கடுமையாக விமர்சித்துள்ளார். 

Actor Vijay Madurai Tamilaga Vettri Kazhagam R B Udhaya Kumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: