Advertisment

பாஜக மாநில தலைவர் பதவிக்கு நான் தயார் : எஸ்.வி. சேகர் பகிரங்க பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil nadu latest news live, nadigar sangam, s.v.sekar

s.v.sekar , எஸ்.வி. சேகர்

ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றிருந்த எஸ்.வி. சேகர், பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தாம் தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

Advertisment

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு நேற்று வழிபாட்டிற்கு சென்றிருந்தார் எஸ்.வி. சேகர். அவர் வழிபாடு நடத்தினார். அனைத்து வழிபாடுகளையும் முடித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

எஸ்.வி. சேகர் பேட்டி :

அப்போது  செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், “நீங்கள் தமிழக பாஜக தலைமையை ஏற்றுக் கொள்ளாததால் தான் உங்களை செயற்குழுவுக்கு அழைக்கவில்லையா?” என்று நிருபர் கேள்விகேட்டார். அந்தக் கேள்வியை தவறாக புரிந்துகொண்ட அவர்,  பொறுப்பை தம்மிடம் கொடுத்தால் தற்போது இருக்கும் வாக்கு வங்கியை விட அதிக வாக்கு வங்கியை உண்டாக்க முடியும் எனத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர் மீண்டும் ஒருமுறை கேள்வியை கேட்கவே, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எனத் தெரிவித்த எஸ்.வி.சேகர், அதற்காக தினமும் தமிழிசை வீட்டு முன் நிற்க வேண்டுமா? என்று கூறினார்.

Bjp Sv Sekar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment