இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/z870-300x217.jpg)
இந்த நிலையில் 83 பக்கங்கள் கொண்ட இறுதி உத்தரவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதில், "முதல்வர் பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு. முதலமைச்சர் பழனிச்சாமி அணிக்கு பெரும்பான்மை உள்ளதால் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அதிமுக என்ற பெயரை பழனிச்சாமி, பன்னீர்செல்வம் அணியினர் பயன்படுத்தலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/z871-300x217.jpg)
இரட்டை இலையை முடக்கி மார்ச் 22ல் பிறப்பித்த உத்தரவை திரும்பபெறுகிறோம். பெரும்பாலான எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் முதலமைச்சர் அணிக்கு ஆதரவு தெரிவித்ததால், சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அணிக்கு 111 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. தினகரன் அணிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 பேர் உட்பட 20 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என அதில் கூறப்பட்டு உள்ளது. அதிமுகவில் லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ளதால் அனைவரிடமும் பொதுவாக்கெடுப்பை நடத்த இயலாது; கட்சியின் பொதுக்குழுவையே லட்சக்கணக்கான தொண்டர்களின் பிரதிநிதிகளாக கருதமுடியும்" என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தீபா கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத காரணத்தால் அவரது வாதங்கள் ஏற்கப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2017/11/z873-300x217.jpg)