/tamil-ie/media/media_files/uploads/2018/10/3-13.jpg)
chennai weather
Red Alert Issued in Tamil Nadu by IMD, Heavy Rain Expected for Next 3 Days: தமிழகத்தில் வரும் அக்டோபர் 7-ந்தேதி மிக கன மழைப் பெய்யும் வாய்ப்பிருப்பதாக ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 7ந் தேதி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்திற்கு ரெட் அலர்ட் :
மிகக் குறுகிய காலத்தில் அதீதமான கனமழைப் பெய்து அதனால் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகும் போது அதைக் குறிக்க ரெட் அலர்ட் எனும் சொல் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
தற்போது வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி இருக்கிறது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை வரும் 7-ந்தேதி அன்று அதிகபட்சமாக 25 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
இன்றிரவிலிருந்தே மழையின் அளவு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிரது. குறிப்பாக கடலோர மாவட்டங்களிலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் அதிக மழை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி அந்தந்த மாநில ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தேவைப்பட்டால் தேசியப் பேரிடர் மீட்புக்குழுவும் அழைத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
read more .. கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
ஆகஸ்ட் மாதம் கேரளாவிற்கு கொடுக்கப்பட்டது போல் அக்டோர் 7ந் தேதி தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்துக்கு அதிக மழை காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள அலர்ட் மற்றும் அது சார்ந்த பல முன்னெச்சரிக்கை, அறிவுரைகளை தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.