விவாகரத்துக்கு இதெல்லாம் ஒரு காரணமா? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

இல்லற வாழ்வில் ஒத்துழைக்க மறுக்கிறார் எனக்கூறி எளிதாக ஒதுக்கிவிட முடியாது

By: Updated: January 28, 2019, 11:40:07 AM

திருமணமாகி 16 ஆண்டுகள் கழித்து விவாகரத்து கேட்ட கணவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுத்துள்ளது. மேலும், அவரின் விவாகரத்து காரணத்தை ஏற்க மறுத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கம்ப்யூட்டர் செண்டர் நடத்தி வரும் நபர் ஒருவருக்கு இந்துமதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் கடந்த 1997-ல் திருமணம் நடந்தது. கடந்த 1999-ல் இந்த தம்பதினருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்நிலையில் தனது உடல் ரீதியிலான ஆசையை மனைவி பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி கணவர் கடந்த 2013-ம் ஆண்டு ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில் வன்கொடுமை சட்டப் பிரிவின்கீழ் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். இதை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த பதில் மனுவில், கணவரின் குற்றச்சாட்டு பொய் என்று கூறியிருந்தார்.

மேலும், ”கணவருக்கும், அவருடைய அத்தை மகளுக்குமிடையே தவறான தொடர்பு உள்ளது. அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதற்கு ஏதுவாக என்னிடம் விவாகரத்து கோருகிறார். எனவே எனது கணவருக்கு விவாகரத்து வழங்க முடியாது. மேலும் எனக்கும், எனது மகளுக்கும் மாதம் ரூ. 30 ஆயிரத்தை ஜீவனாம்சமாக வழங்க கணவருக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த ஈரோடு குடும்ப நல நீதிமன்றம், ‘மனைவி மற்றும் மகளின் பராமரிப்புக்காக கணவர் மாதந்தோறும் ரூ. 7,500-ஐ ஜீவனாம்சமாக வழங்க உத்தரவிட்டு, கணவரின் மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கணவர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று முன் தினம் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரான கணவர் 16 ஆண்டுகள் கழித்து தனது மனைவி தாம்பத்திய ஆசையை பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி விவாகரத்து கேட்டிருப்பது ஏற்புடையதல்ல.

இது வன்கொடுமை சட்டப் பிரிவின்கீழ் ஏற்றுக் கொள்ளவும் முடியாது என நீதிபதிகள் கூறியுள்ளனர். உடல்நிலை, குழந்தை வளர்ப்பு , குடும்ப சூழ்நிலை என பல காரணங்களால் மனைவி இல்லற வாழ்க்கைக்கு மறுத்திருக்கலாம் . இல்லற வாழ்வில் ஒத்துழைக்க மறுக்கிறார் எனக்கூறி எளிதாக ஒதுக்கிவிட முடியாது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சரியான உத்தரவைதான் பிறப்பித்துள்ளது” எனக்கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Refusal of sex for 16 years after marriage is not cruelty says chennai high court

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X