இலங்கை தமிழர்களின் திருமணங்கள் பதிவு: ஜூலை 25, 26-ல் பதிவு துறை சிறப்பு முகாம்

மறு​வாழ்வு முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்​களின் திரு​மணங்​களை பதிவு செய்ய ஜூலை 25, 26-ம் தேதி​களில் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும் என்று பதிவுத் துறை தெரி​வித்​துள்​ளது.

மறு​வாழ்வு முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்​களின் திரு​மணங்​களை பதிவு செய்ய ஜூலை 25, 26-ம் தேதி​களில் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும் என்று பதிவுத் துறை தெரி​வித்​துள்​ளது.

author-image
WebDesk
New Update
Registration Department special camp to Registe Sri Lankan Tamils marriages on July 25th and 26th Tamil News

திருமண பதிவுக்​காக காத்​திருக்​கும் மறு​வாழ்வு முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்​கள் அனை​வரும் இதை பயன்​படுத்​திக் கொள்ள வேண்டும்​ என்று கூறப்பட்டுள்ளது.

மறு​வாழ்வு முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்​களின் திரு​மணங்​களை பதிவு செய்ய ஜூலை 25, 26-ம் தேதி​களில் சிறப்பு முகாம்​கள் நடத்​தப்​படும் என்று பதிவுத் துறை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து பதிவுத் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது:-

Advertisment

மறு​வாழ்வு முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்களின் திரு​மணத்தை பதிவு செய்ய, பத்​திர பதிவுத் துறை​யால் கடந்த 2018-ம் ஆண்டு ஒரு சிறப்பு முகாம் நடத்​தப்​பட்​டது. 2018 டிசம்​பர் 10-ம் தேதி முதல், திருமண தரப்​பினர் இணைய வழி​யில் விண்​ணப்​பித்​து, திருமண பதிவு​கள் நடந்து வரு​கின்​றன. இந்த நிலை​யில், மறு​வாழ்வு முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்​களின் திரு​மணங்​களை பதிவு செய்ய, சிறப்பு முகாம் நடத்துமாறு பத்​திர பதிவுத் துறைக்கு அயலக தமிழர் நலன், மறு​வாழ்வு துறை ஆணை​யர் கோரிக்கை கடிதம் அனுப்​பி​யுள்​ளார். இதை கருத்​தில் கொண்​டு, சிறப்பு முகாம்​கள் நடத்த பத்​திர பதிவுத் துறை ஏற்​பாடு செய்​துள்​ளது.

அதன்​படி, சனிக்​கிழமை வேலை நாளாக உள்ள சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் ஜூலை 26-ம் தேதி​யும் (சனிக்​கிழமை), அன்று செயல்​ப​டாத சார்​ப​தி​வாளர் அலு​வல​கங்​களில் ஜூலை 25-ம் தேதி​யும் (வெள்​ளிக்​கிழமை) திரு​மணங்​களை பதிவு செய்ய, சிறப்பு முகாம்​கள் நடத்​து​மாறு பதிவு அலு​வலர்​களுக்கு பதிவுத்துறை தலை​வர் அறி​வுறுத்​தி​யுள்​ளார். திருமண பதிவுக்​காக காத்​திருக்​கும் மறு​வாழ்வு முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்​கள் அனை​வரும் இதை பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்​.

இவ்வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல்.

Tamil Nadu Govt

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: