பத்திர பதிவுத்துறை ஐஜியாக இருப்பவர் சிவன் அருள் ஐஏஎஸ். இவரது மனைவி சுமதி (53). இவர்கள் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். மகள், டாக்டராக பணிபுரிந்து வருகிறார். மகன், கல்லூரியில் படித்து வருகிறார்
கடந்த 2 ஆண்டுகளாக மன அழுத்தத்துக்கான சுமதி சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த 6 மாதங்களாக அவரது மகள் தான் சுமதியுடன் இருந்து கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று காலை வழக்கம்போல சிவன் அருள் வீட்டிலிருந்து வேலைக்குக் கிளம்பிச் சென்றிருக்கிறார். மகள் கல்லூரிக்கு சென்றுவிட்டார். மகளும், வெளியே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
அப்போது, வீட்டில் சுமதியும், வீட்டு வேலை செய்யும் பெண்ணும் மட்டும் இருந்திருக்கின்றனர். இந்தச் சமயத்தில் சுமதி, பாத்ரூமிற்குச் சென்றிருக்கிறார்.
குளியலறை சென்று வெகுநேரமாகியும் சுமதி வெளியே வராததால், சந்தேகமடைந்த வீட்டு வேலைக்கார பெண், கதவை தட்டினார். ஆனால் கதவை சுமதி திறக்கவில்லை. சுமதியின் சத்தமும் கேட்காததால், உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சுமதி இறந்து கிடந்திருக்கிறார்.அவரின் அருகில் பிளேடு ஒன்றும் இருந்திருக்கிறது. இதையடுத்து, ஜஜி சிவனுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
விரைந்த வந்த காவல் துறையினர், சமதியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், சுமதி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். அவரது உடல் உடற்கூராய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களாக சுமதி மன அழுத்ததில் இருந்து வந்ததாகவும், அதீத மன அழுத்தத்தில் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil