Advertisment

பேரறிவாளனுக்கு ஆதரவாக குரல்: ட்விட்டரை கலக்கிய பிரபலங்கள்

பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி இயக்குனர்கள் பாரதிராஜா, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் குரல் கொடுத்து ட்விட்டரை கலக்கி வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
release perarivalan, perarivalan, aruthammal, பேரறிவாளன், பேரறிவாளன் விடுதலை, perarivalan release, cinema celebrities support to release of perarivalan, சினிமா நட்சத்திரங்கள், பாரதிராஜா, பா ரஞ்சித், விஜய் சேதுபதி, bharathiraja, pa ranjith, vijay sethupathi, prakash raja, release perarivalan trending

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி இயக்குனர்கள் பாரதிராஜா, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட சினிமா நட்சத்திரங்கள் குரல் கொடுத்து ட்விட்டரை கலக்கி வருகின்றனர்.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் விடுதலை செய்ய வலியுறுத்தி Release perarivalan என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் என பலரும், பேரறிவாளன் விடுதலையை வலியுறுத்தி ட்வீட் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், இந்திய அளவில் பேரறிவாளன் விடுதலை ட்ரெண்டிங் ஆகி ட்விட்டரை கலக்கியுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களை விடுதலை செய்ய தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்க வில்லை. அதனால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர்.

பேரறிவாளன் தற்போது பரோலில் அவருடைய குடும்பத்துடன் உள்ளார். பேரறிவாளனின் தாயார் அற்புதம்மால் பேரறிவாளன் விடுதலைக்காக 30 ஆண்டுகளாக போராடி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குனர்கள் பாரதிராஜா, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பாராஜ், நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் பல சினிமா நட்சத்திரங்கள் பேரறிவாளனை விடுதலை செய்யக் கோரி ட்விட்டரில் Release Perarivalan என்ற ஹேஷ்டேக்கில் கருத்து தெரிவித்ததால் பேரறிவாளன் விடுதலை என்ற முழக்கம் ட்விட்டரையே கலக்கியுள்ளது.

இயக்குனர் பாரதிராஜா, “எழுவர் விடுதலையில் உச்ச நீதிமன்றம் தடையாக இருக்கவில்லை. ஆளுநர் முடிவெடுத்து விடுவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தன் கருத்தை அறிவித்தும் தமிழக அரசு அனைத்துக் கட்சித் தலைவர்கள் தமிழக மக்கள் கோரிக்கை வைத்தும் விடுவிப்பதில் காலதாமதம் செய்வது வருத்தத்துக்குரியது. தம்பி பேரறிவாளன் விடுதலைக்காக ஒரு தாய் 30 வருடமாக சட்ட போராட்டங்கள் நடத்தி, ஒரு விடியற்காலை பொழுதுக்காக கண்ணீர் மல்க காத்திருப்பது வேதனைக்குரியது. மதிப்புக்குரிய ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்களே மன்றாடி கேட்கிறொம். மனது வையுங்கள்... உடனே விடுதலை தாருங்கள்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இயக்குனர் பா.ரஞ்சித், “சட்டம் தன் வாசலைத் திறந்த பின்னும் அரசியல் காரணங்களால் விடுதலையை மறுப்பது அநீதி.” என்று ட்வீட் செய்துள்ளார்.

இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ், “குற்றம் செய்யமல் ஒரு மனிதன் 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தனது மகனை மீட்க 30 ஆண்டுகளாக ஒரு தாயின் போரட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வரையும் ஆளுநருக்கும் எங்களுடைய வேண்டுகோளாக வைக்கிறோம். தயவு செய்து இதற்குப் பிறகாவது தாயையும் மகனையும் சுதந்திரமாக வாழவிடுங்கள்.” என்று கூறினார்.

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள வீடியோவில், “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து ஆளுநர் அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்யனும் என்று வேண்டி கேட்டுக்கிறேன். அற்புதம்மாள் அவர்களுடைய 29 வருட போராட்டம் ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுங்கள் என்று வேண்டி கேட்கிறோம். தயவு செய்து உச்ச நீதிமன்றத்தின் தீர்பை மதித்து பேரறிவாளன் அண்ணன் அவர்களை சீக்கிரமாக விடுதலை பண்ணனும்” என்று தெரிவித்துள்ளார்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Pa Ranjith Vijay Sethupathi Perarivalan Bharathiraja
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment