கருமேகங்களின் திடீர் வருகையும், சென்னை நகரின் சில பகுதிகளில் வீசிய காற்றும், அதைத் தொடர்ந்து பெய்த மழையும் செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தை இனிமையாக்கியது.
கடுமையான வெயிலுக்கு மத்தியில் மழை பெய்ததால் சற்று வெப்பம் தணிந்து காணப்பட்டது. தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை ஒரு டிகிரி அல்லது இரண்டு டிகிரிக்கு குறைவாக இருக்கும், அதே நேரத்தில் புறநகர்ப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.
நேற்று (மே 30) நுங்கம்பாக்கத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது, இது இயல்பை விட இரண்டு டிகிரி குறைவாக இருந்தது, மீனம்பாக்கத்தில் 38.6 டிகிரி செல்சியஸ் பதிவானது.
அதைத் தொடர்ந்து மாலையில் சில பகுதிகளில் மழை பெய்த நிலையில், வெப்பம் சற்து தணிந்தது. புறநகர் பகுதிகளான செம்பரம்பாக்கம் 6.5 மி.மீ, மேற்கு தாம்பரம் 1.5 மி.மீ, பூந்தமல்லி 13.5 மி.மீ, புழல் 0.5 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை வானிலை மைய அதிகாரி செந்தாமரை கண்ணன் கூறுகையில், கோடைகால வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
மேற்கு விதர்பாவிலிருந்து தென் தமிழகம் வரையிலான காற்றழுத்த தாழ்வுநிலை இருப்பதால் ஜூன் 2 முதல் 4 வரை சென்னை உள்பட கடலோரப் பகுதிகளில் கனமழை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil