தமிழகத்தில் உள்ள ஆலயங்கள், பள்ளி வாசல் தேவாலையங்கள், புதிதாக கட்ட, புதுப்பிக்க தமிழக அரசின் தடையில்லாத சான்றிதழ் பெற வேண்டும் என இதுவரை இருந்த நடைமுறை தளர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு கோரிக்கை வைத்து வெற்றி பெற்ற தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்க்கு நன்றி தெரிவித்த, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் இடம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக கேட்டபோது, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் இந்த கோரிக்கையை வைத்து வெற்றி பெற்ற தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ்யை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து குமரி மாவட்டம் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தேன் என்றார்.
தமிழகத்தில் நிலப்பரப்பு குறைந்த மாவட்டம் குமரி. மண்டைக்காடு கலவரத்திற்கு பின் வேணுகோபால் கமிஷன் கொடுத்துள்ள ஒரு தீர்வு குமரி மாவட்டத்தில் ஒரு பெரும் பிரச்சினை, தமிழகத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களில் இல்லாதது.
உங்களுக்கு நினைவிருக்கலாம். அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத அந்த நாட்களில் குமரி மாவட்டத்தில் நடைபெற்ற அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஜெயலலிதா பேசியதில் முக்கி மான பேச்சு. கிறிஸ்துவின் அருளால் கழக ஆட்சி ஏற்பட்டால், பட்டா நிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கட்ட எவ்வித தடையும் இருக்காது என்ற ஆணை பிறப்பிக்கப்படும் என பேசினார். ஜெயலலிதா பேசியது போல் தமிழகத்தில், ஜெயலலிதாவின் ஆட்சி ஏற்பட்டது ஆனால், குறிப்பிட்ட அரசாணை மட்டும் வெளியாகவில்லை.
குமரி மாவட்டத்தில் மட்டுமே புதிதாக தேவாலயம் கட்டுவதே, புதுப்பிக்கவோ, மாவட்ட ஆட்சியரிடம் எத்தனை மனு கொடுத்தாலும் அதுவும் குறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் புதிதாக கட்டுவது, புதுப்பித்தல் என்ற மனுக்களுக்கு அனுமதி கிடைப்பது குதிரை கொம்பு நிலை. குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ள ஜெப அறை (PRAYER ROOM) முறையை பாஜக கடுமையான முறையில் எதிர்ப்பு தொடர்ந்து தெரிவிப்பது கிறிஸ்தவர்களுக்கு இருக்கும் ஒரு பெரும் பிரச்சினை. 10ஆண்டுகளுக்கு முன் ஜெப அறைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்த பிரச்சினையில் ஒரு கொலையே நடந்து பல ஆண்டுகள் வழக்கும் நடந்தது.
இந்நிலையில், தமிழக அரசின் ஆட்சியரிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய அவசியமில்லை என்று தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட பரிந்துரை செய்த தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அண்ணன் பீட்டர் அல்போன்ஸ் முதல்வர் மு.க.ஸ்டாலிடம் வைத்த கோரிக்கையை ஏற்று குமரி மாவட்டம் மக்களின் சார்பில் நேரில் நன்றி தெரிவித்தேன் என ராஜேஷ் குமார் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“