Advertisment

”பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலி புனிதமான ஒன்று” – சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து 

”ஒரு பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலி என்பது புனிதமான ஒன்று. திருமணம் நீட்டித்திருப்பதற்கு இதுவே ஒரு சாட்சி. தாலியை கழுத்திருந்ந்து நீக்குவது கணவர் மரணமடைந்த பிறகுதான் நடக்கும்”- சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள்

author-image
WebDesk
New Update
”பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலி புனிதமான ஒன்று” – சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கருத்து 

தாலியை கழுத்திலிருந்து  நீக்கும் செயல் ஒரு வித மனக்கொடுமையை  கணவர்களுக்கு ஏற்படுத்தும் எற்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது

Advertisment

சி. சிவகுமார் என்பவர் ஈரோட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பேராசியராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது மனவியும் கருத்துவேறுபாடு காரணமாக 2011ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சிவகுமாருக்கு விவாகரத்து வழங்க இயலாது என்று 2016ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு வேலுமணி மற்றும் சவுந்தர் நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சமந்தபட்ட பெண், கணவரை பிரிந்து வாழும் காலத்தில்,  தாலியின் செயினை மட்டுமே நீக்கியதாவும். தாலியை மாற்றவில்லை என்று கூறினார்.  அப்பெண்ணின் வழக்கறிஞர் வாதிட்டபோது, இந்து திருமண சட்டத்தின் பிரிவு 7 படி, தாலி கட்டுவது என்பது கட்டாயமில்லை என்றும் அதானால் அதை நீக்குவது ஒரு பொருட்டாகாது என்றும் வாதிட்டார். ஆனால் பொது நம்பிக்கையின்படி தாலி கட்டுவது என்பது ஒரு முக்கியமான கலாச்சாரம் அதை வேறுபடுத்தி பார்க்க இயலாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஒரு பெண்ணின் கழுத்தில் இருக்கும் தாலி என்பது புனிதமான ஒன்று. திருமணம் நீட்டித்திருப்பதற்கு இதுவே ஒரு சாட்சி. தாலியை கழுத்திருந்ந்து நீக்குவது கணவர் மரணமடைந்த பிறகுதான் நடக்கும். எனவே சமந்தப்பட்ட பெண் கணவரை பிரிந்து வாழும் காலத்தில் தாலியை கழுத்திலிருந்து நீக்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் அவரது கணவரை அவர் மனக்கொடுமைக்கு தள்ளியுள்ளார். மேலும் அவரது உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.  என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.  

2011ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்து வருவதாகவும். இடைபட்ட காலத்தில் சேர்ந்து வாழ சமந்தபட்ட பெண் எந்த முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் சூழலை வைத்து பார்க்குபோது, விவாகரத்து வழங்குவதே சரியான தீர்வாக இருக்கும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment