சென்னையின் அண்ணா மேம்பாலம் ரூ.8.85 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகிற நிலையில், அதன் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னையின் மத்திய பகுதியில் அண்ணா மேம்பாலம் (ஜெமினி மேம்பாலம்) கட்டப்பட்டிருக்கிறது. 1971-ம் ஆண்டு இந்த 600 மீட்டர் நீளமுள்ள மேம்பாலத்தை ரூ.66 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டு, 1-7-1973 அன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

இது சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலம், மேலும் இதனின் பெயரை அண்ணாவின் நினைவாக கருணாநிதி, அண்ணா மேம்பாலம் என மாற்றி பெயரிட்டார்.
இப்பாலம் சி.ஆர்.ஐ.டி.பி. 2021-2022 திட்டத்தின்கீழ் ரூ.8.85 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பாலத்தின் தூண்களை ஜி.ஆர்.சி. பேனல்கள் கொண்டு மறுவடிவமைப்பு செய்யவும், இப்பாலத்தின் கீழே பொலிவூட்டும் வகையில் பசுமை செடி வகைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு செய்தார்.
இப்பணிகளை 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுரை வழங்கினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil