கோவை வரதராஜபுரம் பகுதியில் 1969-ல் தொடங்கப்பட்டது காந்தி நூற்றாண்டு நினைவு நடுநிலைப்பள்ளி.
இங்கு தற்போது சுமார் 750-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடம், பராமரிப்புகள் இல்லாமல் ஓடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்துள்ளது.
இந்நிலையில் அங்குள்ள மாணவர்களின் கல்வியை தடையில்லாமல் மேற்கொள்ள ஆசிரியர்கள் மரத்தடியின் கீழ் மாணவர்களை அமர வைத்து பாடங்களை கற்றுக் கொடுத்து வந்துள்ளனர்.
இதனிடையே அங்குள்ள பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தனியார் துறையை சேர்ந்த ஊழியர்கள் கிரிக்கெட் விளையாட சென்றுள்ளனர்.
/indian-express-tamil/media/media_files/o26GkFOuEeo5wQcSo9vW.jpg)
அப்போது பள்ளி முழுவதும் இடிந்துள்ளதையும் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்று வருவதை பார்த்து உள்ளனர்.
இதனை அடுத்து ஊழியர்கள் அவர்களது பிரிமியர் மில்ஸ் குழுமத்தின் நிறுவனத்திடம் பள்ளியின் நிலைமை குறித்து கூறவே அவர்கள் தானாக முன்வந்து சுமார் 4 கோடி மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டி கொடுத்து பள்ளி மாணவர்களுக்கு மறு வாழ்வு கொடுத்துள்ளனர்.
தனியார் துறையை சேர்ந்த ஊழியர்கள் செய்த இந்த செயலாளர் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“