தமிழ்நாட்டில் உள்ள 60 ரயில் நிலையங்களை மேம்படுத்த அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
அமிரீத் பாரத் ரயில் நிலைய திட்டம் என்னும் புதிய கொள்கையின் மூலம் ரயில் நிலையங்களை நவீனமயதாக்குவதற்கு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவு செய்தனர்.

இந்த திட்டத்தை, ரயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையை பொருத்தும், பயணத்திற்கு தேவையான வசதிகளை கருத்தில் கொண்டும் தயார் செய்துள்ளனர்.
மக்களுக்கு தேவையான அத்தியாவசியங்களை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களில் மேம்பாடுகள் நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள வசதிகளுக்கு மேல் புதிய வசதிகள் ரயில் நிலையங்களில் அறிமுகம் செய்யப்படும்.
ரயில் நிலையங்களில் தகவல் பலகைகள், மாற்றுத் திறனாளிகளுக்கான வசதிகள், பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் 60 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சேலம் கோட்டம்: மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, திருப்பூர், போத்தனூர், ஈரோடு, சேலம், நாமக்கல், ஊட்டி, குன்னூர், கரூர், பொம்மிடி, சின்ன சேலம், திருப்பத்தூர், சமால்பட்டி, மொரப்பூர்
மதுரை கோட்டம்: புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்குடி, பரமக்குடி, அம்பாசமுத்திரம், புனலூர், திருச்செந்தூர், தென்காசி, மணப்பாறை, சோழவந்தான், பழனி, விருதுநகர், கோவில்பட்டி, ராஜபாளையம், திருவில்லிபுத்தூர்,
திருச்சி கோட்டம்: தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், காரைக்கால், மன்னார்குடி, திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், அரியலூர், திருவரங்கம், திருவண்ணாமலை, விருத்தாசலம், வேலூர் கண்டோன்மென்ட், போளூர், லால்குடி.
சென்னைக் கோட்டம்: கிண்டி, மாம்பலம், சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, பெரம்பூர், அம்பத்தூர், திருவள்ளுர், செயினிட் தாமஸ் மவுன்ட், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, சூலூர் பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மேம்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.