ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : கிராம மக்கள் கோரிக்கை!

தூத்துக்குடியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் தூத்துக்குடியை சேர்ந்த 3 கிராம மக்கள்  ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த மே 22-ல் நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது  கலவரம் வெடித்தது. அப்போது  கலவரத்தை நடத்த காவல் துறையினர் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த  சம்பவங்களைத் தொடர்ந்து, கடந்த 28-ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டு, ஆலைக்கும் சீல் வைத்தது.

இதனால், ஸ்டெர்லைட்  ஆலையில் பணிபுரிந்து வந்த 1,900 நிரந்த பணியாளர்கள் 3,000 ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் மறைமுகமாக வேலை பெற்று வந்தவர்களும் வேலை இழந்தனர்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆலையில் வேலை பார்த்தவர்களும் ஒப்பந்தத்  தொழிலாளர்களும் அமைச்சர் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.  கிராம மக்களைப் போலவே, தூத்துக்குடி லாரி உரிமையாளர்களும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், ஆலைக்குத் தாமிர தாது, ராக் பாஸ்பேட், நிலக்கரி ஏற்றி வந்த 1000-க்கும் அதிகமான லாரிகள் வேலை இழந்துள்ளன. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஆலையைத் திறக்க வேண்டும், இல்லை என்றால் எங்களுக்கு மாற்று வேலை ஏற்பாடு செய்ய வேண்டும்’ என மனு அளித்தனர்.

ஆலைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வந்த கிராம மக்களே ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருப்பது தூத்துக்குடியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close