தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் இருந்தும் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கவுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 17ம் தேதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre--ல் 2023ம் ஆண்டு நடந்து முடிந்த “10 மற்றும் 12-ஆம்” வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு, அவர்களது பெற்றோர் முன்னிலையில் நடிகர் விஜய் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்க உள்ளார்’’ என தெரிவித்துள்ளார்.
இதனால், விஜய் விரைவில் அரசியலுக்கு வர உள்ளார் என பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில், உலக பட்டினி தினத்தில் அனைவருக்கும் மத்திய உணவு வழங்க விஜய் வலியுறுத்தியிருந்தார்.
அதன்படி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உணவு வழங்கப்பட்டது.
மேலும், சமுதாய தலைவர்கள் பிறந்தநாள் விழாவில் ரசிகர்களை பங்கேற்க செய்து அரசியல் மையப்படுத்துகிறார் விஜய்.
அரசியல் களத்தில் கால் பதிக்கவுள்ள நடிகர் விஜய் தனது நலத்திட்டங்களில் தொகுதியை மையப்படுத்தி அறிக்கை வெளியாகி வருகிறது.
தொகுதி வாரியாக மத்திய உணவு, தொகுதி வாரியாக 3 இடங்கள் பிடித்த மாணவர்கள் என தொகுதியை மையப்படுத்தி அறிக்கை வெளியிடப்படுகிறது.
எனவே, தொகுதி என்பதை குறிப்பிட்டு அறிக்கைத் தரும் விஜய் அரசியல் களத்திற்கு ஆயத்தமாவதாக ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
இதனால், 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிகளை மையப்படுத்தி வருகிறாரா? விஜய் எனவும் கேள்வி எழுந்துள்ளது.
விஜய் மக்கள் மன்றத்தில் மீனவர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட 10 அணிகள் உள்ளன. விஜய்யின் செயல்பாடுகளும் 234 தொகுதிகளை உள்ளடக்கியே இருப்பதால் அவர் 2026 இல் அரசியல் களத்தில் குதிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“