kanchipuram: அதிவேகமாக பைக் ஓட்டி இளைஞர்கள் மத்தியில் யூடியூப் வழியாக பிரபலமானவர் டிடிஎஃப் வாசன். கோயம்புத்தூரை சேர்ந்த இவர், அண்மையில் இரு சக்கர வாகனத்தில் லடாக் பயணம் மேற்கொண்டார்.
இந்தப் பயணத்தை அதிவேகமாக முடித்தார். இதனால் பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து இவரிடம் பல்வேறு யூடியூப் சேனல்கள் பேட்டி கண்டன.
இதற்கிடையில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சட்ட விதிகளை மீறுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளும் இவர்மீது உள்ளன. இவருக்கு இளம் வயதினர் பெரும்பாலும் ரசிகர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் டிடிஎஃப் வாசன் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கினார். அதாவது காஞ்சிபுரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த பை தார்ச்சாலையை விட்டு கீழே இறங்கியது.
இதில் தூக்கி வீசப்பட்ட டிடிஎஃப் வாசன் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவருக்கு கையில் மாவுக்கட்டு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அவரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக போக்குவரத்துத்துறை பரிந்துரைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
டிடிஎஃப் வாசன் பைக் விபத்து குறித்து சமூக வலைதளங்களில் ஆரோக்கியமாகவும், ஆட்சேபத்துக்குரிய வகையிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவர் பால்ய இளைஞர்களை தவறான பாதையில் அழைத்துச் செல்கிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதற்கிடையில் அண்மையில் டிடிஎஃப் வாசன், “மஞ்சள் வீரன்” என்ற படத்தில் கமிட் ஆகி இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“