tamil-nadu-congress | dmk | தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள், கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரியிடம் 2024 மக்களவை தேர்தலில் திமுகவிடம் 10-15 தொகுதிகள் வரை கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனால் இந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் திமுகவிடம் 10-15 தொகுதிகள் வரை கேட்கும் எனக் கூறப்படுகிறது. சென்ற 2019 மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ், திமுக மகத்தான வெற்றியை பதவு செய்தது.
இந்தத் தேர்தலில் காங்கிரஸ் திருவள்ளுவர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தேனி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்டது.
இதில் தேனியை தவிர மற்ற இடங்களில் காங்கிரஸ் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. தேனியில், முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்திடம் காங்கிரஸ் வேட்பாளர் தற்போதைய எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தோல்வியை தழுவினார்.
கடந்த முறை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்து சந்தித்த அதிமுக இம்முறை தனியாக சந்திக்க உள்ளது. காங்கிரஸ் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்தக் கூட்டணியில் கடைசி நேரத்தில் மேலும் சில கட்சிகளும் இணையக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“