/tamil-ie/media/media_files/uploads/2018/01/chennai-republic..jpg)
Republic Day, Governor Banwarilal Purohit, National Flag
குடியரசு தின விழாவையொட்டி தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியேற்றினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.
#69thRepublicDay : சென்னை மெரினாவில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்..#BanwarilalPurohit | #RepublicDay | #RepublicDay2018pic.twitter.com/ypE2uZYq4R
— Thanthi TV (@ThanthiTV) January 26, 2018
குடியரசு தினவிழா, இன்று இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. 69-வது குடியரசு தினம்! சென்னையில் கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றினார்.
குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறைச் செயலாளர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். குடியரசு தின அணிவகுப்பு மரியாதையை ஆளுனரும் முதல்வரும் ஏற்றுக்கொண்டனர்.
#RepublicDaypic.twitter.com/CMRPiam5wF
— O Panneerselvam (@OfficeOfOPS) January 26, 2018
வீரதீரச் செயல்கள் மூலமாக தேர்வு பெற்றவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதக்கம் அணிவித்தார். தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றை ஆளுனரும், முதல்வரும் மேடையில் அமர்ந்து பார்த்து ரசித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.