குடியரசு தின அணிவகுப்பு: 4 நாட்கள் சென்னை போக்குவரத்தில் மாற்றம்

குடியரசு தினத்தன்று நடக்கும் அணிவகுப்பும், கலைநிகழ்ச்சிகளும், அந்நாட்டின் இறையாண்மையை பிரதிபலிப்பதால் மிகவும் துல்லியமாகவும், பிழையில்லாமலும் நடத்தல் வேண்டும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்த நாளை (ஜனவரி, 26 1950) குடியரசு தினமாக இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்தியாவின் முக்கிய தேசிய நாளாக கருதப்படும் இந்த தினத்தன்று, தலைநகர் தில்லியில் மூவண்ணக் கொடியை ஏற்றி, படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார். அதேபோன்று, ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆளுநர் மூவண்ணக் கொடியேற்றுவதுடன்,காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுவார்.

குடியரசு தினத்தன்று நடக்கும் அணிவகுப்பும், கலைநிகழ்ச்சிகளும், அந்நாட்டின் இறையாண்மையை பிரதிபலிப்பதால் மிகவும் துல்லியமாகவும், பிழையில்லாமலும் நடத்தல் வேண்டும்.  எனவே, இதற்கான ஒத்திகை இன்று முதல் 23ம் தேதி வரை நடக்கயிருக்கிறது.


தமிழக போக்குவரத்து காவல்துறை சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

  1. சாந்தோம் பேராலயம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை ஒத்திகை‌ நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், காலை 6 மணி முதல் 10 மணி வரை காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்திற்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது
  2. இதனால், சென்னை அடையாறு பகுதியிலிருந்து காமராஜர் சாலையில் பிராட்வே நோக்கி செல்லும் வாகனங்கள், கிரின்வேஸ் சாலை மற்றும் கச்சேரி சாலை வழியாக திருப்பி விடப்படுகிறது.
  3. காமராஜர் சாலை வழியாக பாரிமுனையிலிருந்து  அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதைக்கு முன்பாக ராஜா அண்ணாமலை மன்றம் வழியாக திருப்பி விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
  4.  அண்ணா சதுக்கம் பேருந்து நிறுத்தம் தற்காலிகமாக வாலாஜா சாலை விருந்தினர் மாளிகை அருகில் மாற்றப்பட்டுள்ளது.
  5. சிவசாமி சாலை (12 ஜி மற்றும் 45 பி) வழியாக அண்ணா சதுக்கத்தை நோக்கிய பேருந்துகள் மியூசிக் அகாடமி சந்தி, ராயப்பேட்டா அரசு மருத்துவமனை,ஸ்மித் சாலை, அண்ணா சலை, வாலாஜா சாலை வழியாக திருப்பி விடப்படும்.
  6. இதேபோல் 21 ஜி வழித்தடத்தில் உள்ள எம்டிசி பேருந்துகள் ராயப்பேட்டா ஃப்ளைஓவர்வழியாக , ராயப்பேட்டா கடிகார கோபுரம், ஒயிட்ஸ் சாலை மற்றும் அண்ணா சலாய் வழியாக பிராட்வே சென்றடையும்
  7. இந்த போக்குவரத்து மாற்றம் வரும் 23ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குடியரசு தினமான வரும் 26ம் தேதியும் இந்த போக்குவரத்து மாற்றம் நடைமுறையில் இருக்கும்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Republic day parade chennai police announced traffic diversion

Next Story
Hi guys : போடியில் போட்டி போட்டுக்கொண்டு குவியுறாங்களாம் – தெரிஞ்சுக்கலாம் வாங்க…hai guys, polio compaign, kids, polio drops, kerala, mosque, hindu marriage, pinarayi vijayan, edappadi palanichami, polio free state, theni, bodimettu, fog, tourists, venkaiah naidu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com