குடியரசு தினவிழா அணி வகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு ஊர்தி இடம்பெறவில்லை. ஆனால், மூன்று சுற்றுகளில் நிபுணர் குழுவின் கவனத்தை ஈர்க்க தவறியுள்ளது. மேலும், நிபுணர் குழு தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் வேலு நாச்சியாரின் குதிரையை பிரவுன் நிறத்தில் மாற்றச் சொன்னதாகவும் கோயில் இருக்க வேண்டும் என்று கூறியதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லியில் ராஜபாதையில் ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறுவதற்கு மாற்றங்களைச் செய்து 3 முறை முயன்றும் நிபுணர் குழுவை ஈர்க்கத் தவறியுள்ளது.
புதுடெல்லியில் ராஜபாதையில் இந்திய குடியரசு தினவிழா அணிவகுப்பு ஜனவரி 26ம் தேதி நடைபெறுகிறது. இந்த குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழ்நாடு மாநிலத்தின் அலங்கார ஊர்தி இடம்பெறத் தவறினாலும், சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மாற்றங்களைச் செய்து 3 முறை முயற்சி செய்தும் பாதுகாப்பு அமைச்சகத்தின் நிபுணர் குழுவின் கவனத்தை ஈர்க்கத் தவறியுள்ளது.
குடியரசு தின விழா அணி வகுப்பில், 21 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகிறது. அதில், 12 அலங்கார ஊர்திகள் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் சார்பில் பங்கேற்கின்றன. 9 அலங்கார ஊர்திகள், மத்திய அமைச்சங்கள், துறைகளில் இருந்து பங்கேற்கின்றன. இந்த அலங்கார ஊர்திகளில் தமிழ்நாடு மாநிஅல் ஊர்தி இடம்பெறவில்லை.
இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில், தமிழ்நாடு 2019, 2020, 2021 என தொடர்ந்து மூண்டு ஆண்டுகள் பங்கேற்ற நிலையில், இந்த முறை ஏழு ஓவியங்களை முன்வைத்து அணிவகுப்பு நடத்த மாநில அரசு தயாராகி வந்தது. தமிழ்நாடு அலங்கார ஊர்தி, ஒரு கப்பல் போலவும் அதன் முன்னால் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் நிற்பது மாதிரியும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக இந்தியாவில் வ.உ. சிதம்பரத்தால் நிறுவப்பட்ட சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனத்தை முன்னிலைப்படுத்துவதற்காக கப்பல் மாதிரி வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், ஊர்தியின் பின் பக்கத்தில் தடையில்லாமல் வ.உ.சி.யின் மார்பளவு சிலை இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று நிபுணர் குழு கருதியது. மூன்றாவது சுற்றில், “குழு உறுப்பினர் ஒருவர் வ.உ. சிதம்பரனார் தொழிலதிபரா என்று கேட்டதாக” வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் முழுவதும் சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 150வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் ஒரு முக்கிய தலைவரின் முக்கியத்துவத்தை அரசு அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.
அதே போல, தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் சுதந்திரப் போராட்ட வீரரும் மகாகவி சுப்ரமணிய பாரதி, வெளிநாட்டுப் பொருட்களை எரிக்கும் சுதந்திரப் போராட்ட வீரர், சிவங்கை மருது சகோதரர்கள், ராணி வேலு நாச்சியார், வெள்ளைக் குதிரையில் வாள் ஏந்தியவாறு இருக்கும் ஓவியம் வரையப்பட்டிருந்தது. 1730ல் பிறந்த வீரமங்கை வேலு நாச்சியார் ஆங்கிலேயர்களுடன் போரிட்ட முதல் ராணியாக அறியப்படுகிறார்.
தமிழ்நாடு அலங்கார ஊர்தி இடம்பெறுவதற்காக மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது சுற்று பரிசீலனையில், வேலு நாச்சியாரின் குதிரை நிறத்தை பழுப்பு நிறமாக மாற்ற வேண்டும் என்றும், ஜான்சி ராணியைப் போல தோற்றமளிப்பதால், அவரது முகத்தில் தமிழ் அம்சம் அதிகம் இருக்க வேண்டும் என்றும் நிபுணர் குழு கூறியுள்ளது. தமிழ்நாடு நிறைய கோயில்களைக் கொண்ட மாநிலம் என்பதால் ஒரு கோயில் வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது” என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆங்கிலேயர்களை எதிர்த்ததற்காக தூக்கிலிடப்பட்ட சிவகங்கையை ஆண்ட மருது பாண்டியர் சகோதரர்களின் வடிவமைப்பு கடுமையாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக நிபுணர் குழு கருதியுள்ளது. மேலும், மருது சகோதரர்கள் இந்திய அளவில் பெரிய அளவில் தெரியாதவர்கள் என்று குழுவின் உறுப்பினர் ஒருவர் கிண்டல் செய்துள்ளார்.
மூன்றாவது சுற்றில், தமிழ்நாடு அரசு, அலங்கார ஊர்தியை கப்பல் மாதிரி வடிவமைத்து வ.உ.சி.யின் மார்பளவு சிலை, சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் வெளிநாட்டு பொருட்களை எரிப்போம் என்ற முழக்கத்துடன் பாரதி இலை அமைத்துள்ளது. வேலு நாச்சியார் பழுப்பு நிறக் குதிரையில் பச்சைப் புடவையில் சவாரி செய்வது போஅல்வும், மருது சகோதரர்கள் வாள் ஏந்தியும், நான்கு பெண் வீரர்கள் ஈட்டிகளை ஏந்தியிருக்கும்படி வடிவமைத்துள்ளது. அதில், காளையார் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு குழு முப்பரிமாண மாடலைக் கொண்டு வருமாறு கூறியுள்ளது. ஆனால், அதற்கு பிறகு அழைப்பு வரவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள், குடியரச் தின விழா அணிவகுப்பில் இடம்பெறும் அலங்கார ஊர்திகளில் சிறந்த வடிவமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்ன். இதனால், ஒரு மாநிலத்தின் அலங்கார ஊர்தி நன்றாக இருந்தது மற்ற மாநிலத்தின் அலங்கார ஊர்தி மோசமாக இருந்தது என்று அர்த்தமல்ல. இது ஒப்பீட்டு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதன் தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“