புதுவை துணைநிலை ஆளுநரின் தனி செயலாளர் தேவநீதி தாஸை சிறப்பு பதவி என கூறி பதவி நீட்டிப்பை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
புதுவை துணைநிலை ஆளுநரின் தனிசெயலாளர்:
இது தொடர்பாக புதுச்சேரி லாஸ்பேட்டை சேர்ந்த சரவணன், என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொதுநல மனுவில், புதுச்சேரி துணை ஆளுநர் கிரண்பேடியின் தனிச் செயலாளராக பணி புரிந்த தேவநீதிதாஸ் என்பவர் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்ற பின்பும், சிறப்பு பணி என்ற அடிப்படையில் மீ்ண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நியமனம் விதிகளின் படி இல்லை. இவரின் நியமனம் தொடர்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு தெரிவிக்கவில்லை.
மூத்த அதிகாரிகள் பலர் இருந்தும், அவர்களை புறக்கணித்து இந்த நியமனம் நடைபெற்றுள்ளது. விதிகளின் படி இந்த நியமனம் செய்யபடதால் அதனை ரத்து செய்ய வேண்டும். எனவே தேவநீதி தாசை பணியிலிருந்து நீக்கவேண்டும் அவரை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். மணிக்குமார், பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நடந்த ரகசிய கடித நகல்கள் எப்படி மனுதாருக்கு வழங்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட தகவல் அதிகாரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும், என்று உத்தரவிட்டு வழக்கை 12 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
அதே போல தகவலறியும் உரிமைச் சட்டத்தில் தான் இந்த தகவல் பெறப்பட்டதா? என்பது குறித்து மனுதாரர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.