1300 டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறப்பதை எதிர்த்த மனு தள்ளுபடி : சென்னை ஐகோர்ட் உத்தரவு

உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள உள்ளதால், வழக்கை மேல் கொண்ட இங்கு விசாரணை செய்வது சரியானதாக இருக்காது.

By: Updated: June 18, 2018, 01:20:23 PM

தமிழகத்தில் மூடப்பட்ட 1300 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் மூட உச்ச நீதிமன்றம் கடந்த 2016 ஆம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 கடைகள் மூடப்பட்டன.

பின்னர், மாநகராட்சி, நகராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் கடைகளுக்கான உரிமங்கள் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றாமல், தமிழகத்தில் 1,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றி அறிவிக்காமல் திறக்கப்பட்ட கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் செல்லும் சாலைகளில் இருந்த கடைகளை திறக்க வகை செய்யும் வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கடந்த மே மாதம் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. அதில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளை வகை மாற்றம் செய்யபட்டது.

இந்த அரசாணையின் அடிப்படையில் 1,300 மதுகடைகள் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை தலைவர், வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளை வகைப்படுத்தும் அதிகாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையருக்கு இல்லை என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை தவறாக புரிந்து கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். இந்த அரசாணை படி திறக்கப்பட்ட மதுக்கடையை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆஷா ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் பாலு, தமிழக அரசின் இந்த அரசாணை, விதிகளுக்கு எதிரானது. எனவே இதனை ரத்து செய்ய வேண்டும். இதன்படி திறக்கப்பட்ட மதுக்கடையை மூட உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயண், ஏற்கனவே இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தமிழக அரசு ஆணைக்கு தடை விதிக்க மறுத்து விசாரணை கோடை விடுமுறைக்கு பின்னர் தள்ளிவைத்துள்ளனர் என தெரிவித்தனர்.

இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள உள்ளதால், வழக்கை மேல் கொண்ட இங்கு விசாரணை செய்வது சரியானதாக இருக்காது. எனவே மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Resistance to reopen 1300 tasmak shop chennai high court order

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X