இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு தலைமையில், துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது.
அதன்பேரில், வரும் டிசம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடத்தப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
/indian-express-tamil/media/media_files/2024/12/02/EiHzyc5pnBHVatmjf7MD.jpg)
மேலும், "சட்டப்பேரவை கூட்டத் தொடரின் தொடக்க நாளான டிசம்பர் 9-ஆம் தேதி, மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி இன்றி சுரங்க உரிமை ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது எனவும் ஒன்றிய அரசை வலியுறுத்தி அரசினர் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.